குளவி கொட்டி 3 வயது குழந்தை பரிதாபகரமாக பலி
வவுனியாவில் குளவிக் கொட்டி மூன்று வயது குழந்தை பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதுடன், மேலும் மூவரும் குளவிக் கொட்டுக்குள்ளாகியுள்ளனர்.
வவுனியா, ஓமந்தை நொச்சிமோட்டை பகுதியிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நேற்றைய தினம் பிற்பகல் நொச்சிமோட்டை பகுதியில் அமைந்துள்ள காணியில் துப்புரவு பணியினை மேற்கொண்டிருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் மீது அப் பகுதியில் மரம் ஒன்றில் இருந்த குளவிகள் கொட்டியுள்ளன.
இதனால் தாக்குதலுக்குக்குள்ளான அவர்கள் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
எனினும் சிகிச்சை பலனின்றி மூன்று வயது குழந்தை உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒரு குழந்தையும், குழந்தையின் தாய் மற்றும் உறவினர் ஒருவர் என மூவர் தாக்குதலுக்குள்ளான நிலையில் சிகிக்சை சிகிச்சை பெற்று வருகின்றனர்.
குறித்த சம்பவத்தில் அருள்ராசன் சமிஸ்கா என்ற மூன்று வயது சிறுமியே உயிரிழந்துள்ளார்.
Post a Comment