நான் மிகவிரைவில் சிறைச்சாலையில் அடைக்கப்பட உள்ளேன் - 36 வழக்குகள் உள்ளன
தான் விரைவில் சிறைக்குச் செல்வதற்கு நியமித்துள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங் கள் தெரிவித்துள்ளன என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்தார்.
தான் பல்வேறு தவறுகளைப் பற்றிப் பேசுவதால் நீதிமன்றத்தில் தற்போது தனக்கு எதிராக 36 வழக்குகள் நிலுவையில் உள்ளன என அவர் தெரிவித்தார்.
அரசியல் பழிவாங்கலுக்காகச் சிறைக்கு அனுப்பப்படாவிட்டால் மக்களுக்காகத் தொடர்ந்து நிற்பேன் என அவர் தெரிவித்தார்.
கொலைக் குற்றச்சாட்டில் சிறைச்சாலைக்குச் சென்றவர்கள் பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் செய்யும் முறையில் தனக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டால் அந்த நீதி தனக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என நேற்று பாராளுமன்றத்தில் இதனைத் தெரிவித்துள்ளார்.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக மேற்கொண்ட வழக்கு தற்போது விசாரணை முடிவுக்கு வந்த நிலையில் அதன் இறுதித் தீர்ப்பு அடுத்த மாதம் வழங்கப்பட திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment