அட்டுளுகம விவகாரம் - 3 பெண்கள் உட்பட 4 பேர் கைது!
3 பெண்கள் உட்பட 4 பேர் அட்டுளுகம சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
பண்டாரகம, அட்டுளுகம , மாராவ பிரதேசத்திற்கு போதைப்பொருள் சுற்றிவளைப்புக்குச் சென்ற பொலிஸ் குழுவினர் மீது பிரதேசவாசிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
குறித்த பிரதேசத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரிடம் பெறப்பட்ட தகவல்களுக்கு அமைய சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பின்னர் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபரை பொலிஸ் நிலையம் நோக்கி அழைத்து செல்லும் போது பொலிஸ் ஜீப் வாகனத்தை வழிமறித்த பிரதேசவாசிகள் பொலிஸார் மீது கற்களால் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
நிலைமையை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக சுற்றியுள்ள பொலிஸ் நிலையங்களின் பொலிஸ் அதிகாரிகள் போன்று விசேட அதிரடிப்படையினரும் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளர்.
Post a Comment