Header Ads



பாதுகாப்புச் செயலாளர் எழுதிய கோட்டாபய நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பு, பாதாள கோஷ்டி ஆகிய 2 நூல்கள் வெளியீடு

பாதுகாப்புச் செயலாளர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன எழுதிய கோட்டாபய நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பு மற்றும் பாதாள கோஷ்டி ஆகிய நூல்கள் இன்று -06- வௌியிட்டு வைக்கப்பட்டன.

 பாதுகாப்புச் செயலாளர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன எழுதிய கோட்டாபய நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பு மற்றும் பாதாள கோஷ்டி ஆகிய நூல்கள் இன்று வௌியிட்டு வைக்கப்பட்டன.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ, சபாநாயகர் சமல் ராஜபக்ஸ மற்றும் பாதுகாப்பு துறை உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டிருந்தனர்.

5 வருடங்களில் 7 புத்தகங்களை எழுத கிடைத்தமை தொடர்பில் நான் மகிழ்ச்சியடைகின்றேன். எமது நாட்டிற்கு பாரிய பிரச்சினையாகவுள்ள பாதாள கோஷ்டி மற்றும் திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக ஜனாதிபதி மற்றும் பிரதமரின் ஆலோசனையின்படி பாரிய முயற்சிகைளை மேற்கொள்கிறோம். எமது நாட்டின் எதிர்கால சமூகத்தை இதில் இருந்து பாதுகாக்க வெண்டும். தொடரும் இதே நிலைமையில் எமது நாடு 5 அல்லது 10 வருடங்கள் சென்றால், எமது நாடு சோமாலியாவை விட மோசமான நிலமைக்கு மாறும் என பாதுகாப்பு செயலாளர் என்ற வகையில் பொறுப்புடன் கூறுகின்றேன்

என அவர் பாதுகாப்பு செயலாளர், ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

பாதுகாப்புச் செயலாளர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன எழுதிய கோட்டாபய நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பு மற்றும் பாதாள கோஷ்டி ஆகிய நூல்கள் முதலில் தேரர்களிடம் கையளிக்கப்பட்டன.

பின்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவிடமும் இந்த நூல்கள் கையளிக்கப்பட்டன.

No comments

Powered by Blogger.