20 ஆவது திருத்தத்தில் ஏற்றுக்கொள்ள முடியாத சில பிரிவுகள் உள்ளடக்கப்பட்டுள்ளன
அரசியலமைப்பின் முன்மொழியப்பட்ட 20 ஆவது திருத்தத்தில் ஏற்றுக்கொள்ள முடி யாத சில பிரிவுகள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக பெங்கமுவே நாலக தேரர் தெரிவித் துள்ளார்.
ஜனாதிபதியை நீதிமன்றத்தில் சந்தித்து கேள்வி கேட்க 20 ஆவது திருத்தச் சட்டம் தடுத்துள்ளது என்றும் அவ்வாறு செய்வது பொருத்தமானதல்ல என்றும், ஜனாதிபதி யாக இருந்தபோதிலும் அரசியலமைப்பிற்கு முரணாகச் செயற்பட்டால் அவருக்கு நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்ல வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என பெங்கமுவே நாலக தேரர் தெரிவித்துள்ளார்.
இந்தச் சட்டத்தால் தணிக்கையாளர் ஜெனரலின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டுள்ளன என்றும் சில அரசு நிறுவனங்களைத் தணிக்கை செய்வதற்கான அதிகாரம் இடை நிறுத்தப்பட்டுள்ளது என்றும் இது ஏற்றுக்கொள்ள முடியாதது என அவர் கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
Post a Comment