Header Ads



20 மீதான விவாதம் ஆரம்பமானதும், ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கம் பக்கம் வருவார்கள்



20வது திருத்தத்தின் மீதான நாடாளுமன்ற விவாதம் ஆரம்பமானவுடன் ஐக்கியமக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் அரசாங்கத்துடன் இணைவார்கள் என மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

20வது திருத்தத்தின் மீதான நாடாளுமன்ற விவாதம் ஆரம்பமானதும் ஐக்கியமக்கள் சக்தியிலிருந்து எத்தனை நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தின் பக்கம் வருவார்கள் என்பது தெரியவரும் என அவர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ஜேஆர்ஜெயவர்த்தனவே 1978இல்மிகவும் வலுவான ஜனாதிபதி முறையை அறிமுகப்படுத்தினார் என குறிப்பிட்டுள்ள அவர் தற்போதைய எதிர்கட்சி தலைவரின் தந்தையும் அந்த நிறைவேற்று அதிகார முறையை அனுபவித்தார் என குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் ரணில்விக்கிரமசிங்கவை வலுவானவராக்குவதற்காகவே 19வது திருத்தம் கொண்டுவரப்பட்டது என குறிப்பிட்டுள்ள அவர் தன்னால் நிறைவேற்று அதிகாரம் மிக்க ஜனாதிபதியாக வரமுடியாது என்பது விக்கிரமசிங்கவுக்கு தெரியும் இதன் காரணமாக அவர்தன்னை அதிகாரம் மிக்கவராக மாற்றவேண்டியிருந்தது என தெரிவித்துள்ளார்.

இந்த நோக்கத்தின் காரணமாகவே 19வது திருத்தம் நடைமுறைப்படுத்தப்பட்டது என தெரிவித்துள்ள மகிந்தானந்த அளுத்கமகே நானும் அதற்கு ஆதரவாக வாக்களித்தேன் என்பது உண்மை , நல்லாட்சி அரசாங்கம் 20வது திருத்தத்தை கொண்டுவருவதாக உறுதியளித்ததன் காரணமாகவே நான் வாக்களித்தேன் ஆனால் அந்த வாக்குறுதி காப்பாற்றப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.