Header Ads



தீப்பற்றிய கப்பலை சுற்றி 11 படகுகள் நிறுத்தம்


கிழக்கு கடற்பரப்பில் தீப்பற்றிய எம்.டி நியுவ் டயமன்ட் கப்பல் கடல்பரப்பின் 40 மைல் தூரத்திற்கொண்டு செல்லப்பட்டதன் பின்னர் அதனை கண்காணிப்பதற்காக 11 படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை இதனை தெரிவித்துள்ளது.

இந்த பணியில் இந்திய கடலோர பாதுகாப்பு படைக்கு சொந்தமான அமெயா என்ற கப்பலும் ஈடுப்படுத்தப்பட்டுள்ளது.

எம்.டி நியுவ் டயமன்;ட் கப்பலில் பரவிய தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ள போதிலும் அதில் உள்ள எண்ணெய் கடலில் கலப்பதற்கான காரணிகள் உள்ளனவா என்பது குறித்து அதிகம் கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும் இந்திய கடலோர பாதுகாப்பு படை அதன் உத்தியோகபூர்வ ட்விட்டர் கணக்கில் தெரிவித்துள்ளது.

2 லட்சத்து 70 ஆயிரம் டன் மசகு எண்ணெயுடன் பயணித்த குறித்த எம்.டி நியுவ் டயமன்ட் கப்பி;; நேற்று முன்தினம் காலை தீப்பரவல் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.