Header Ads



இஸ்லாமிய முறைப்படி Zoom மூலமாக நடந்த திருமணம்


கனடாவில் மணமகனும், பெங்களூரில் மணமகளும் இருந்த நிலையில் ஓன்லைன் மூலம் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.

கொரோனா கட்டுபாடுகள் காரணமாக இந்த முறையில் திருமணம் நடந்தது.

கேரளாவை சேர்ந்தவர் Atheef Abdurahman. இவர் கனடாவின் ஒன்றாறியோவில் வணிக மேலாண்மை தொடர்பிலான படிப்பை பயின்று வந்தார்.

இவருக்கும் Nyla Jasmine என்ற பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. கேரளவை சேர்ந்த Nyla Jasmine பெங்களூரில் தங்கி படித்து வந்தார்.

Atheef மற்றும் Nyla ஆகிய இருவரும் ஓன்லைன் மூலம் சந்தித்து ஒருவரிடம் ஒருவர் பேசி கொண்டனர்.

இந்த நிலையில் கொரோனா கட்டுபாடுகள் காரணமாக இருவருக்கும் ஓன்லைன் மூலம் திருமணம் செய்து வைக்க குடும்பத்தார் முடிவு செய்தனர்.

திருமண பத்திரிக்கையும் வாட்ஸ் அப்பில் நண்பர்கள், உறவினர்களுக்கு அனுப்பப்பட்ட நிலையில் Atheef - Nyla திருமணத்தை ஓன்லைனில் பார்ப்பதற்கான இணைப்பும் அனுப்பப்பட்டது.

இதன்பின்னர் இஸ்லாமிய முறைப்படி Zoom செயலி மூலமாக இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

பெங்களூரில் உள்ள மணமகளின் தந்தை கனடாவில் உள்ள மணமகனுக்கு இஸ்லாமிய சடங்குகளின்படி திருமணத்தில் தனது மகளை ஒப்படைப்பதாக தெரிவித்தார்.

இதனை ஏற்று கொள்வதாக கனடாவில் உள்ள மணமகன் தெரிவித்தார், இதன் மூலம் Atheef - Nyla திருமண நிகழ்வு நிறைவு பெற்றது.

உறவினர்களும் நண்பர்களும் இந்த ஜோடியை ஓன்லைன் மூலம் மனதார வாழ்த்தினார்கள்

1 comment:

Powered by Blogger.