ஹஜ் யாத்திரையில் பங்கேற்ற, எவரும் கொரோனா தொற்றுக்குள்ளாகவில்லை - சவுதியின் நடவடிக்கைக்கு WHO வாழ்த்து
இந்த ஹஜ் யாத்ரையில் பொதுவாக உலகெங்கிலுமிருந்து 2 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கலந்து கொள்வர்.
எனினும் கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு ஹஜ் யாத்தரையில் கலந்துகொள்வோரின் எண்ணிக்கை வியத்தகு வரையில் குறைக்கப்பட்டது.
அதன்படி சவுதி, சவுதியில் உள்ள 20 - 50 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. அவர்களில் எண்ணிக்கை 1000 ஆக மட்டுப்படுத்தப்பட்டதுடன், அவர்கள் நோயற்றவர்களாக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.
இந் நிலையில் யாத்ரையில் கலந்துகொள்ள தேர்ந்தெடுக்கப்பட்டோர் 14 நாட்கள் தனிமைப்படுத்தலின் பின்னர் யாத்தரையில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டனர்.
சவுதி அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைக்கு உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார்.
இந் நிலையில் யாத்ரையில் கலந்துகொண்ட எவரும் கொரோனா தொற்றுக்குள்ளாகவில்லை என்று சவுதி அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது.
சவுதி சுகாதார அமைச்சின் கூற்றுப்படி, இராஜ்ஜியத்தில் சனிக்கிழமை 1,573 புதிய கொரோனா வைரஸ் தொற்றாளர்களும் 21 இறப்புகளும் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
அதேநேரம் அங்கு மொத்தமாக 277,478 கொரோனா தொற்றாளர்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர்.
Sfddc
ReplyDelete