Header Ads



UNP க்குள் மீண்டும் முரண்பாடுகள்

(நா.தனுஜா)

பொதுத்தேர்தலில் மிகப்பாரிய பின்னடைவைச் சந்தித்திருக்கும் ஐக்கிய தேசியக் கட்சி புதிய தலைமைத்துவமொன்றின் கீழ் முழுமையான மறுசீரமைப்பிற்கு உட்படுத்தப்பட வேண்டும்.

அதனை மையப்படுத்தி கட்சியின் பொறுப்புக்களுக்கு வெவ்வேறு பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ள நிலையில், அதுகுறித்து சிரேஷ்ட உறுப்பினர்களுக்கிடையில் முரண்பாடுகள் ஏற்பட்டிருப்பதாகத் தெரிகிறது.

இவ்விடயத்தில் கருத்து முரண்பாடுகளைத் தவிர்த்து நாட்டையும் இனத்தையும் கட்சியையும் பாதுகாத்துக்கொள்வதற்காக ஒருமித்த தீர்மானமொன்றை மேற்கொள்ள வேண்டிய நிலையிலேயே கட்சி இருக்கின்றது என்பதை அனைவரும் புரிந்துகொண்டு செயற்பட வேண்டும் என்று அக்கட்சியின் பிரதிச்செயலாளர் ருவன் விஜேவர்தன வலியுறுத்தியிருக்கிறார்.

2020 பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி மிகப்பாரிய பின்னடைவைச் சந்தித்ததுடன், தேசிய பட்டியல் மூலமான ஒரு ஆசனத்தைத் தவிர பாராளுமன்றத்தில் எந்தவொரு ஆசனங்களையும் பெற்றுக்கொள்ள முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டது.

ஆகவே கட்சியின் தலைமைத்துவத்தில் மாற்றம் ஏற்படுத்தப்படுவதுடன், கட்சி முழுமையாக மறுசீரமைப்பிற்கு உட்படுத்தப்பட வேண்டும் என்ற கருத்துக்களும் வலுப்பெற்றிருக்கின்றன. எனினும் கட்சித்தலைமைத்துவம் தொடர்பில் இதுவரையில் எவ்வித இறுதித்தீர்மானங்களும் எட்டப்படவில்லை.

இவ்வாறானதொரு நிலையில் கட்சியின் பிரதிச்செயலாளர் இன்று வியாழக்கிழமை வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கட்சியின் தலைமைத்துவ மாற்றம் மற்றும் கட்சி மறுசீரமைப்பு குறித்து வலியுறுத்தியிருக்கின்றார்.

1 comment:

Powered by Blogger.