UNP யின் தலைமைத்துவத்திற்கு நவீன், பாலித ரங்கே பண்டார ஆகியவர்களின் பெயர்களும் முன்மொழிவு
அந்த கட்சியின் பொது செயலாளர் அகில விராஜ் காரியவசம் இதனை தெரிவித்துள்ளார்.
“ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவம் தொடர்பில் இன்று அறிவிக்கப்பட இருந்த போதிலும் இறுதித் தீர்மானத்திற்கு வர முடியவில்லை” எனவும் அவர் கூறியுள்ளார்.
கட்சியின் தலைமைத்துவம் தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்காக இன்று ரணில் விக்ரமசிங்க தலைமையில் அவரது கொள்ளுபிட்டிய வீட்டில் ஒன்றுகூடியிருந்தனர்.
இருப்பினும் இன்று இறுதித் தீர்மானத்திற்கு வர முடியவில்லை என கட்சியின் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
கட்சியின் தலைமைத்துவம் தொடர்பான இறுதி தீர்மானத்தை எதிர்வரும் வெள்ளிக்கிழமை அறிவிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அண்மையில் இடம்பெற்ற நாடாளுமன்ற தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி படு தோல்வியை சந்தித்த நிலையில், கட்சியின் தலைமை பதவியில் இருந்து விலகுவதாக முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியிருந்தார்.
இதனையடுத்து ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய தலைவரை நியமிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
கட்சியின் தலைமைத்துவத்திற்கு கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம், உப தலைவர் ரவி கருணாநாயக்க, வஜிர அபேவர்தன மற்றும் தயா கமகே ஆகியவர்களின் பெயர் பரிந்துரைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்காக இன்று ரணில் விக்ரமசிங்க தலைமையில் அவரது கொள்ளுபிட்டிய வீட்டில் ஒன்றுகூடியிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஐக்கிய தேசியக் கட்சியில் தற்போது பதவிகளில் உள்ள யாருக்கும் முள்ளந்தண்டு கிடையாது. எனவே எல்லாப் பக்கமும் வளைந்து கொடுக்கும் எவரும் நிலையாக நிற்கமுடியாது.எனவே இந்தத் தலைமைத்துவம் இறுதியில் எங்கோ உள்ள ஒரு பிறவிக்குப் போய்ச் சேரும்.அதனைத் தொடர்ந்து கட்சிக்கான தல்கீனையும் ஓதி அடக்கிவிடவேண்டியதுதான்.
ReplyDelete