IS உறுப்பினரை விசாரிக்க வேண்டாமென, பொலிஸ்மா அதிபர் உத்தரவிட்டார்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
ஐஎஸ்ஐயுடன் இணைந்து செயற்பட்ட பின்னர் நாடு திரும்பிய முகமட் ரிம்சான் என்ற நபரை கைதுசெய்யவேண்டாம் என பொலிஸ்மா அதிபர் கேட்டுக்கொண்டார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ர்pம்சானை விமானநிலையத்தில் தடுத்துவைத்த பயங்கரவாத விசாரணை பிரிவினர் அவரை விசாரணைக்கு வருமாறு அழைத்தனர் என அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் தேசிய புலனாய்வு பிரிவின் பிரதிஇயக்குநர் சம்பத்குமார இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்கவேண்டாம் எனவும் தாங்கள் வேறு விசாரணைகளை முன்னெடுப்பதாகவும் தெரிவித்தார் என நாமல் குமார தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத விசாரணை பிரிவினர் அவரை விசாரணை செய்யவிரும்புவதால் நான் அவரை விசாரணை செய்யப்போவதாக தெரிவித்தேன் ஆனால் சம்பத்குமார ரிம்சானை குழப்பவேண்டாம் என தெரிவித்தார் என நாலக்க சில்வா தெரிவித்துள்ளார்.
அவர் ஏன் நாடு திரும்பினார் என்பது எனக்கு தெரியும்,அது ஐஎஸ் அமைப்பு தோல்வியடைந்து தனது உறுப்பினர்களை சொந்த நாடுகளுக்கு அனுப்பி;க்கொண்டிருந்த தருணம் எனவும் நாலக்க சில்வா தெரிவித்துள்ளார்.
Post a Comment