கட்டாரில் உள்ள இலங்கைத் தூதரகம், மனிதாபிமானத்தை மறந்து விட்டதா..?
கடந்த மார்ச் நடுப்பகுதியில் இருந்து முழுவீச்சில் கொரோன தனது தாண்டவத்தை இன்று வரை ஆடிக்கொண்டுதான் இருக்கிறது. அதில் இருந்து எத்தனையோ சகோதர சகோதரிகள் தங்களது வேளையை இழந்தும் மாதாந்த ஊதியம் இல்லாமலும் ஊதியம் தாமதமயகியும் கனிசமான விகித ஊதியக் குறைப்புடனும் பல இன்னல்களை அனுபவித்துக் கொண்டுடிருக்கிறோம். இதை விட பல நுற்றுக்கணக்கான சகோதர சகோதரிகள் தனது விசா காலம் முடிந்த நிலையில் தாய் நாட்டுக்கு திரும்பமுடியாமல் தங்க இடமில்லமலும் ஒரு வேளை சாப்பிடக்கூட கையில் பணம் இல்லாமலும் மிகவும் அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள் இருந்தும் பெற்றோருக்கு அடத்த படியாக நண்பர்களின் தயவுடனும் தங்களின் விட தன்நம்பிக்கையிலும் இலங்கை செல்லும் நாட்களை எண்னிக்கொண்டு இருக்கிறார்கள்.
இதற்கிடையில் சில தினங்களாக கட்டாரில் உள்ள வடசப் குழுமத்தில் நாடு திரும்ப வேண்டு மெனில் 5750 க்கும் 4300 இடைப்பட்ட கட்டர் பணத்தை (இலங்கை பணப் பெறுமதிப் படி 300000 – 225000) இலங்கை நாட்டு விமசேவைக்கு செலுத்தினால் குழுக்களாக அழைத்துச் சென்று இலங்கையில் உள்ள விடுதியில் தங்கவைத்து வீடு செல்ல முடியுமென விளம்பரம் செய்து வியாபாரம் செய்வதை எமது அதிகரிகள் கண்டுகொள்ளாமல் இருப்பதைப்பார்த்து மிகவும் வேதனையாக உள்;ளது. ( ஆதாரம் இணைக்கப்பட்டுள்ளது). இதை தவறு என்று சொல்லுவதற்கும் மனம் இடம் தரவில்லை காரணம் பண வசதி படைத்தவர்களும் மனிதர்களே.
ஆனால் இதற்கு பணம் செலுத்த வசதி இல்லாமல் அரசை நம்பியிருக்கும் ஆத்மாக்களின் நிலை என்ன. நீங்கள் கேட்களாம் இதற்கும் அதற்கும் என்ன தொடர்பு. சிந்தித்து பாருங்கள் அரச கணக்கின் படி இத்தனை நபர்க்ள் தான் கட்டாரில் இருந்து வரவழைக்க முடியும் என்றால் பணம் இல்லாமல் சுகயீனமுற்ற குடும்ப உறுப்பினர்களை, பிறந்த குழந்தையை, வேளையே இல்லாமல் நாட்டுக்கு செல்ல காத்திருக்கும் ஆன்மாக்களுக்கு எப்போது இடம் கிடைக்கும். இந்த இடத்தில் இன்னும் ஒன்றை நினைவூட்டப்பட வேண்டும் கட்டாரிலுள்ள இலங்கை தூதரகம் ஆட்களை பதிவு செய்து இதுவரை அதனூடாக சென்றவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு மிகவும் முயற்சிக்கு அப்பால் தொடர்பு கொண்டு கேட்டால் உங்கள் முறை வந்தால் தொடர்பு கொள்வோம் என்பார்கள்.
அத்தோடு வரிசயில் காத்து நின்று சந்தித்து கேட்டால் விமான நிலையம் திறந்தவுடன் செல்லுங்கள் என்று உதாசீனமான வார்த்தைகள். இதனூடாக மிகவும் தாழ்மையுடன் கேட்பது ஆரசாங்கமும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளும் முதலில் கட்டாரில்லுள்ள விசா இல்லாத நபர்களை கூட்டி செல்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள முன்வர வேண்டும். விசா இல்லாமல் தங்கும் ஒவ்வொரு நாளைக்கும் கட்டார் றியாழ் 10 பணம் செலுத்த வேண்டும் எண்பது குறிப்பிடத்தக்கது.
கட்டாரில் இருந்து மு.றூ அப்துல் வாகிட்
நிச்சயம் இது முற்றிலும் உண்மை
ReplyDelete