தெகிவளை குண்டுவெடிப்பு, தனி விசாரணை நடத்துமாறு CID முன்னாள் இயக்குநர் கோரிக்கை
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் சாட்சியமளிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தெகிவளை ஹோட்டல் குண்டுவெடிப்பு குறித்து எனக்கு வேறு விபரங்கள் கிடைத்துள்ளன இதனை நான் விரைவில் ஆணைக்குழு முன்னிலையில் தெரிவிப்பேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
உயிர்த்தஞாயிறு தாக்குதல்கள் 8.45 மணியளவில் இடம்பெற்ற பின்னர் கொழும்பு உடனடியாக முடக்கப்பட்டது என தெரிவித்துள்ள அவர் ஜமீல் என்ற தற்கொலை குண்டுதாரி தனது இலக்கான தாஜ்சமுத்திராவில் குண்டை வெடிக்கவைக்கும் முயற்சியில் தோல்வியடைந்தார் என ஜெயவர்த்தன தெரிவித்துள்ளார்.
அவர் பின்னர் டாக்சி ஒன்றில் தெகிவளை டிரொபிகல் இன்னிற்கு சென்று அங்கு தன்னை வெடிக்கவைத்தார் என அவர் தெரிவித்துள்ளார்.
ஜமீல் தன்னை வெடிக்கவைத்தாரா அல்லது தன்னிடமிருந்த குண்டை அவர் சோதனையிட்டுக்கொண்டிருந்தவேளை அது வெடித்ததா என்பதை உறுதி செய்ய முடியாத நிலை காணப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து நிச்சயமற்ற விடயங்கள் காணப்படுவதால் இது குறித்து விசேடமான தனியான விசாரணை அவசியம் என அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment