சுகவீனமுற்ற இலங்கையரை ஒரு கோடி செலவளித்து, நாட்டுக்கு அனுப்பிவைத்த சவூதி நிறுவனம்.
இலங்கையின் கடவத்தையைச் சேர்ந்த ஒரு பணியாளர் சவூதி அரேபியாவின் ''கல்ப் வெஸ்ட்'' (GulfWest Company Ltd) நிறுவனத்தில் கடமையாற்றி வந்தவர். கடந்த இரு மாதங்களுக்கு முன் நோயுற்ற அவர் தன்னுணர்வு அற்ற நிலையில் (Unconscious) வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவந்தார். அவரது மனைவி மற்றும் வீட்டாரின் வேண்டுகோளுக்கிணங்க மனிதாபிமான ரீதியில் அவருக்கென பிரத்தியேகமாக முன்பதிவுசெய்யப்பட்ட தனியாள் ஜெட் விமானத்தில் இன்று 2020.08.20 காலை ஆறு மணிக்கு ரியாத் மன்னர் காலித் விமான நிலையத்திலிருந்து வைத்திய மற்றும் தாதியர்களுடன் இலங்கைக்கு குறிப்பிட்ட இலங்கையர் அனுப்பிவைக்கப்பட்டார்.
இதற்கென இந்நிறுவனம் 58,000 அமேரிக்க டொலர்களை (இலங்கை மதிப்பில் சுமார் ஒரு கோடி ஐந்துலட்ச ரூபாய்கள்) செலவளித்தமைக் குறிப்பிடத்தக்கது. தனது நிறுவன ஊழியர் ஒருவரை மனிதாபிமான ரீதியில் இவ்வளவு பெரும்தொகை செலவுசெய்து அனுப்பி வைத்த அந்நிறுவனத்தில் செயல் பாராட்டப்பட வேண்டியது. நன்றி கூறப்பட வேண்டியது. இம்முயற்சிக்கென கடைசி வரை உழைத்த குறிப்பிட்ட நிறுவனத்தில் பணிபுரியும் இலங்கைச் சகோதரர் Faseeh Marikkar அவர்களையும் இவ்விடத்தில் குறிப்பிட்டாக வேண்டும்.
குறிப்பு : சுமார் ஒரு லட்சத்திற்கு மேல் இலங்கையர் வசிக்கும் சவூதி அரேபியாவுக்கு ''இலங்கையருக்கான கொரோனா கால நிவாரணம்'' இதற்கு இலங்கை அரசு ஒதுக்கிய தொகை வெறும் 05 லட்சங்கள் மட்டுமே.
S.H.Ismath Ali
Post a Comment