அரசாங்கம் சர்வாதிகாரத்தை நோக்கி செல்கின்றது என தெரிவிப்பது தீய நோக்கத்துடனான பொய் - பிரதமர் மகிந்த
சண்டே ஒப்சேவருக்கு வழங்கியுள்ள பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்
இது தீயநோக்கத்துடனான பொய்,என தெரிவித்துள்ள அவர்நாங்கள் ஆட்சிசெய்தவேளை மக்கள் சுதந்திரமாகயிருந்தார்களா என அவர்களை கேட்போம் என பிரதமர் தெரிவித்துள்ளார்.
சர்வாதிகாரம் நோக்கி கதைப்பவர்கள் உண்மையில் அறிவற்றவர்கள் எனவும் தெரிவித்துள்ள மகிந்த ராஜபக்ச நாங்கள் ஒருபோதும் சர்வாதிகாரிகளாகயிருந்ததில்லை என குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஆட்சியின் போது சர்வாதிகார போக்குகள் காணப்பட்டன தலைவர்கள் தாங்கள் விரும்பிய விதத்தில் நடந்துகொண்டனர் என அவர் தெரிவித்துள்ளார்.
குற்றச்சாட்டுகளை சுமத்தாமலே எங்களை சிறைக்கு கொண்டுசென்றார்கள் போலியான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் யுத்;தவீரர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர் என அவர் தெரிவித்துள்ளார்.
அவர்கள் தங்கள் நலனுக்கு ஏற்றவிதத்தில் சட்டங்களை இயற்றினார்கள் தீயநடவடிக்கைகளில் ஈடுபட்டார்கள் மக்களின் உணர்வுகளை முற்றாக புறக்கணித்தார்கள் என குறிப்பிட்டுள்ள அவர் மக்களின் கருத்துக்களுக்கும் துயரங்களுக்கும் உரிய முறையில் பதிலளித்தவர்கள் நாங்களே என தெரிவித்துள்ளார்.
பொதுத்தேர்தலில் தமிழ்தேசியகூட்டமைப்புக்கு ஏற்பட்ட பின்னடைவு குறித்து ஆராய்வதற்காக சுயாதீன குழுவை நியமிக்கவேண்டும் என சுமந்திரன் கருத்து வெளியிட்டுள்ளார்.
இலங்கை தமிழரசு;கட்சியின் அரசியல்குழுவின் கூட்டம் தொடர்பாக கருத்து வெளியிடும்போது அவர் இதனை தெரிவித்துள்ளார்
Post a Comment