பெண் வேட்பாளர்களை அதிகமாக, களமிறக்கியுள்ள கட்சி எது தெரியுமா..?
சர்வதேச ரீதியில் பாராளுமன்றத்தில் பெண்கள் பிரதிநிதித்துவ அடிப்படையிலான தரப்படுத்தலில் 193 நாடுகளில் இலங்கை 182 ஆவது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கமைய இலங்கை பாராளுமன்றத்தில் நூற்றுக்கு 5 சதவீத பிரதிநிதித்துவமே காணப்படுகிறது.
இந்நிலையில் 2020 ஆம் ஆண்டுக்கான பொதுத் தேர்தலில் பிரதான கட்சிகள் சார்பில் தேர்தலில் போட்டியிட களமிறக்கப்பட்டுள்ள பெண் வேட்பாளர்களது விபரங்களை பாராளுமன்றத்தின் உத்தியோகபூர்வ இணையதளமான Manthri.lk வெளியிட்டுள்ளது.
அதற்கமைய பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிடுகின்ற 252 வேட்பாளர்களில் 14 பெண் வேட்பாளர்கள் காணப்படுகின்றனர். அதே போன்று ஐக்கிய தேசிய கட்சி சார்பில் போட்டியிடுகின்ற 262 வேட்பாளர்களில் 15 பேர் பெண் வேட்பாளர்களாவர்.
ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிடும் 262 வேட்பாளர்களில் 10 பேர் பெண் வேட்பாளர்களாவர். தேசிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிடுகின்ற 262 வேட்பாளர்களில் 16 பேர் பெண் வேட்பாளர்களாவர்.
இலங்கை தமிழரசுக் கட்சி சார்பில் போட்டியிடுகின்ற 44 வேட்பாளர்களில் 4 பேர் பெண் வேட்பாளர்களாவர். தேசிய மக்கள் சக்தி மாத்திரமே ஏனைய கட்சிகளுடன் ஒப்பிடும் போது அதிகளவான பெண் வேட்பாளர்களை களமிறக்கியுள்ளது.
Post a Comment