ராஜித்தவுக்கும், ரூமிக்கும் வெளிநாடு செல்லத்தடை
சர்ச்சைக்குரிய வெள்ளை வான் ஊடக சந்திப்பு தொடர்பாக முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் வரையறுக்கப்பட்ட அரச மருந்து கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் மொஹமட் ரூமி ஆகியோருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து இவர்களை பிணையில் விடுதலை செய்யுமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கியான் குலதுங்க உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன் இவர்கள் இருவரும் வெளிநாடு செல்ல தடைவிதித்த நீதிபதி, கடவுச்சீட்டுக்களை நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் சந்தேகநபர்களை தலா 10 ஆயிரம் ரொக்கப் பிணை மற்றும் தலா 5 லட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணையில் விடுதலை செய்யுமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
சரீரப் பிணை வழங்கும் இரண்டு நபர்களின் ஒருவர் நெருங்கிய உறவினராக இருக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டது.
இவர்களின் கைவிரல் அடையாளங்கள அறிக்கையை பெற்றுக்கொள்ளுமாறும் நீதிபதி பணித்துள்ளார். இந்த வழக்கு மீதான விசாரணை எதிர்வரும் 22ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Post a Comment