Header Ads



இதைத்தான் எதிர்பார்த்தோம், நல்லதொரு முன்மாதிரி, முஷர்ரபுக்கு பாராட்டுக்கள்..!


இன்று காலை (27:08:2020) ஒரு புதிய இலக்கத்தில் இருந்து காலை 9.00 மணியளவில் ஒரு  அழைப்பு வந்தது, யாரென்று விசாரித்த போது "நான் முஷர்ரப் "என்று கூறினார்... புதிய MP க்கு வாழ்த்துக்கள், என்று ஆரம்பித்த எங்கள் உரையாடலில்... இன்று பாராளுமன்றத்தில் தான் கன்னி உரையை நிகழ்த்த இருப்பதாகவும், அதில் தொல்லியல் தொடர்பான விடயங்களையும் பேச இருப்பதாகவும் அது விடயமாக உங்கள் தேடல்களில் கண்ட உண்மைகளையும், ஆதாரங்களையும் தந்து உதவுமாறு கேட்டுக் கொண்டார். 12 மணிக்கு முன் அவை தேவை என்றார்...

 பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் இவ்வாறு கேட்பது மிகவும் ஆச்சரியமாக இருந்த அதேவேளை ,  இன்று இருந்த பல்கலைக்கழக  கற்பித்தல் வேலைகளுக்கு மத்தியில் முழு மூச்சாக இருந்து , காலை 11:15 மணியளவில் இலங்கை முஸ்லிம்களின் தொல்லியல் தொடர்பான பங்களிப்பு மற்றும் ஆதாரங்கள்  உரிய முறைப்படி  அவசரமாக அனுப்பி வைக்கப்பட்டது.

பிற்பகலில் என்னோடு பேசிய பல பல்கலைக் கழக விரிவுரையாளர் நண்பர்கள்  முஷர்ரப் MP அவர்களின் இன்றைய பேச்சு மிகவும் சிறப்பாக இருந்ததாக குறிப்பிட்டனர்.  நானும் பேச்சைக் கேட்டு மிகவும்  சந்தோஷம் அடைந்தேன் காத்திரமான உரை..... பின்னர் முஷரப் அவர்கள் மீண்டும் பிற்பகல் 5மணியளவில் அழைப்பு விடுத்தார். அவரது ஆதாரபூர்வமான பேச்சை பாராளுமன்றத்தில் பலரும் பாராட்டி விசாரித்ததாக குறிப்பிட்டதுடன்... புத்திஜீவிகளுடனான அவரது எதிர்கால தொடர்புகள் பற்றிய திட்டங்களையும் கூறி நன்றியும் தெரிவித்தார்...

மக்கள் பிரதிநிதிகள் என்போர் தமது கருத்துக்களை உயர் சபையான பாராளுமன்றத்தில் முன்வைக்க புத்திஜீவிகளின்ஆலோசனையும் ஒத்துழைப்பும். துறைசார் வழிகாட்டலும்  அவசியமானது..  அதுவே பல  சிறந்த முஸ்லிம் தலைவர்களின் அணுகுமுறை ஆகும்.

முன்னாள் அமைச்சர்  ARM மன்சூர் அவர்கள்  ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்ற செல்லும் வேளையில் பல புத்திஜீவிகளின் ஆலோசனைகளைப் பெற்றிருந்தார்.. மறைந்த தலைவர் அஷ்ரப் அவர்கள் பல துறைசார் வல்லுனர்களை தன்னோடு அழைத்துச் சென்றார்.. அப்போதுதான் சமூகம் பிரயோசனம் அடையும் என்பது மட்டுமல்ல அது வரலாற்றில் வாழும் உரையாகவும் அமையும்.

அந்தவகையில் ஒரு இளம் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தும். பணிவான முறையில் விடயங்களைக் கேட்டறிந்துடன் உரை முடிந்த பின்னர் மீண்டும் அழைப்பு எடுத்து நன்றி தெரிவிக்கும் நல்ல முன்மாதிரி பாராட்டுக்குரியது. .. அம்பாரை மாவட்ட மக்களாகிய நாம்  இதைத்தான் இதுவரை எதிர்பார்த்தோம்...

 உங்களுக்கு சிறப்பான எதிர்காலம் உண்டு...வாழ்த்துக்கள் முஷரப்..

முபிஸால் அபூபக்கர்

பேராதனைப் பல்கலைக்கழகம்.

2 comments:

  1. இலங்கை முஸ்லிம்களுக்கு தலைமை தாங்கும் ஆளுமை இவரிடம் காணப்படுகின்றது

    ReplyDelete

Powered by Blogger.