விமல திஸ்ஸ தேரர், ஒசாமாபின் லேடன் போன்றவர் - ஞானசார தேரர்
எங்கள் மக்கள் சக்தி கட்சியின் பொதுச் செயலாளர் வெதினிகம விமல திஸ்ஸ தேரர் பின்லேடன் போன்றவர் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
எங்கள் மக்கள் சக்தி கட்சியின் பொதுச் செயலாளர் வெதினிகம விமல திஸ்ஸ தேரர் தான் கடுமையாக தாக்கப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக அண்மையில் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள ஞானசார தேரர்,
எங்கள் மக்கள் சக்தி கட்சியின் பொதுச் செயலாளர் வெதினிகம விமல திஸ்ஸ தேரர் எங்கேயோ ஒளிந்துகொண்டு ஒசாமா பின் லேடன் போன்று வீடியோவை ஊடகங்களுக்கு வெளியிடுகின்றார்.
எங்கள் மக்கள் சக்தி கட்சியில் தேசியப் பட்டியல் விவகாரத்தில் பிரச்சினை இல்லை, செயலாளர் பதவியில் தான் பிரச்சினை உள்ளது.
செயலாளர் ஒரு தந்திரமான, முட்டாள் எருமை. செயலாளர் எனது நம்பிக்கையை உடைத்துவிட்டார் என்று கடுமையாக ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
இதனைச் சொல்பவன் அதைவிடப் பெரிய முட்டாள் எருமை என்பது அவனுக்கு விளங்காமல் இருப்பது தான் மிகவும் விந்தையான விடயம்.
ReplyDeleteஒரு வேதத்தை சுமந்துள்ள துறவியின் இத்தகைய பேச்சுக்கள் ஒரு சமூகத்தை குறைத்து மதிப்பிட வழியமைப்பதாக அமைகின்றன.
ReplyDelete