அருளாளன் அல்லாஹ்வே...!
அருளாளன் அல்லாஹ்வே!
வயதினால் ஏற்படும் தீங்கிலிருந்தும்
உள்ளத்தில் ஏற்படும் குழப்பங்களி லிருந்தும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்.
உனது மகத்தான கண்ணியத்தின் பொருட்டால் பாதுகாப்புக் கேட்கிறேன்.
உன்னையன்றி வணக்கத்திற்குறியவன் யாருமில்லை.
நீ என்னை வழிதவற செய்வதிலிருந்தும்
சோதனைகளின் கடுமை,கெடுவாய்ப்பு வந்தடைதல்,தீய விதி எதிரிகளின் ஏளனத்திற்குள்ளாவது ஆகியவற்றிலிருந்து உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்.
நான் செய்த காரியங்களினால் ஏற்படும் தீங்கிலிருந்தும்
செய்யத் தவறிய காரியங்களால் ஏற்படும் தீங்கிலிருந்தும்
உனது அருட்கொடைகள் நீங்குவதிலிருந்தும்
உனது பாதுகாப்பு மாறிப் போவதிலிருந்தும்
திடீரென வரும் உனது சோதனைகளைலிருந்தும்
உனது அனைத்துக் கோபங்களிலிருந்தும்
உன்னிடம் பாதுகாப்புக் கேட்கிறேன்.
எனது செவியேற்றலின் தீங்கிலிருந்தும்
எனது பார்வையின் தீங்கிலிருந்தும்
எனது நாவின் தீங்கிலிருந்தும்
எனது இதயத்தின் தீங்கிலிருந்தும்
எனது இந்திரியத்தினால் ஏற்படும் தீங்கிலிருந்தும்
வறுமையின் கொடுமையிலிருந்தும் என்னைப் பாதுகாத்தருள்வாயாக
நான் பிறருக்கு அநீதி இழைப்பது
அல்லது பிறர் எனக்கு அநீதி இழைப்பதிலிருந்தும்
என் மீது இடிபாடுகள் விழுவதிலிருந்தும்
நான் மற்றவைகளின் மீது விழுவதிலிருந்தும்
மூழ்கி மடிதலிருந்தும்
நெருப்பில் எரிந்து போவதிலிருந்தும்
என்னைக் காப்பாற்றி அருள்வாயாக!
மரண வேளையில் ஷைத்தான் என்னைக் குழப்புவதிலிருந்தும்
உன் பாதையில் போராட வேண்டிய நேரத்தில் புறமுதுகு காட்டி ஓடிய நிலையில் மரிப்பதிலிருந்தும்
விஷஜந்துக்களால் கடிபட்டு இறப்பதிலிருந்தும்
என்னைப் பாது காத்தருள் ரஹ்மானே!
ஆமீன்.
"நபி மொழித் தொகுப்பிலிருந்து"
Post a Comment