Header Ads



நாட்டில் இடம்பெறுகின்ற சில விடயங்களை, தொடர்ந்தும் மறைத்து வைக்க முடியாது - நீதி அமைச்சர் அலி சப்ரி

(எம்.மனோசித்ரா)


சிறுவர்களுடன் தொடர்புடைய குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பதற்கு தேவையேற்படின் விசேட நீதிமன்றமொன்றை அமைச்சரவையின் அனுமதியுடன் ஸ்தாபிக்க முடியும் என்று நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.


கொழும்பில் இன்று -22- நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,


தற்போது நாட்டில் இடம்பெறுகின்ற சில விடயங்களை தொடர்ந்தும் மறைத்து வைக்க முடியாது. அவை மிகவும் முக்கியமான காரணிகளாகும். சிறுவர்கள் சிறு பருவத்தில் ஏதேனும் அசம்பாவிதங்களுக்கு முகங்கொடுப்பார்களாயின் அதனால் ஏற்படும் பாதிப்பு அவர்களது வாழ் நாள் முழுவதும் காணப்படும்.


எனவே நாம் எவ்வாறேனும் இவ்வாறான செயற்பாடுகளை முற்றாக ஒழிக்க வேண்டும். இதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுத்துச் செல்லும் போது எமக்குத் தேவையான சட்ட ஆலோசனைகளை ஆராய்ந்து அவற்றை உருவாக்க முடியும்.


புதிய சட்டங்கள் மாத்திரமல்ல. தேவையேற்படின் அமைச்சரவையின் அனுமதியுடன் சிறுவர் தொடர்பான குற்றங்களில் ஈடுபடுவர்களுக்கு எதிரான நடவடிக்கை எடுப்பதற்கு விஷேட நீதிமன்றத்தை ஸ்தாபிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். காரணம் இது மிக முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினையாகும் என்றார்.   

2 comments:

  1. க .ரவ (Hon.) நீதி அமைச்சர்,
    "முஸ்லீம் குரல்" இது ஒரு நல்ல நடவடிக்கை என்று நம்புகிறது. ஒரு நீதிமன்றத்தை மட்டுமல்ல, ஒரு சிறப்பு பொலிஸ் பிரிவையும் - தற்போதுள்ள அலகு அல்ல, ஆனால் அனைத்து அனாதை இல்லங்களையும், 16 வயதிற்கு உட்பட்ட சிறு குழந்தைகள் இருக்கும் மத நிறுவனங்களையும் விசாரிக்க போதுமான அதிகாரங்களைக் கொண்ட மிகவும் வலுவான மற்றும் கடமைப்பட்ட ஒரு புதிய போலீஸ் பிரிவு அமைக்கப்பட வேண்டும் என்று முன்மொழிய விரும்புகிறது. குடியிருப்பு செமினரிகளில் புத்த வேதம் மற்றும் கிறிஸ்தவ வேதம் மத பயிற்சிக்காக தங்கவைக்கும் சிறுவர்கள், இஸ்லாமிய மதராசகல், அரபு கற்பித்தல் பாடசலைக்கல் ஆக்கியா நிறுவனங்கலை
    இந்த சிறப்பு பொலிஸ் பிரிவு சிறுவர் துஷ்பிரயோகம் நடக்கிறதா என்று
    தீவிரமாக விசாரிக்க அதிகாரம் வழங்கப்பட வேண்டும். பல அரசியல் சக்திகள், சமூக கூறுகள் மற்றும் மத பிரமுகர்கள், வெளிநாட்டு உள்நுழைவுகள்
    இந்த சமூக துஷ்பிரயோக
    நடவடிகையை பாதுகாக்க எதிர்ப்பார்கள். "எங்கள் மத்ருபூமியா" இல் சிறுவர் துஷ்பிரயோகத்தின் சமூக அச்சுறுத்தலுக்கு எதிரான உங்கள் நல்ல நடவடிக்கை "முஸ்லீம் குரல்" மற்றும் அதன் ஆதரவாளர்கள் இந்த பிரச்சினையில் உங்கள் நிலைப்பாட்டை முழுமையாக ஏற்றுக்கொள்கிறார்கள், இன்ஷா அல்லாஹ்.
    Noor Nizam - Convener "The Muslim Voice".

    ReplyDelete
  2. Nice to see that previous comment did not limit to Muslims....

    Maderasa and Arabic colleges have nothing to hide.. make it open to government authority, who will not act bias. This will be an opportunity to make DAWA to them. Let them all visit Maderasa and Arabic colleges and learn the message of Allah and Guidance of final messenger directly.

    But never compromise the pure message of Quran and Sunnah of Rasoolullah.

    ReplyDelete

Powered by Blogger.