முஸ்லிம்களுக்கு சிறப்புச் சலுகைகள் தேவையில்லை - ஆனால் நீதியும், சமத்துவமுமே அவசியமானது
தேர்தல் வெற்றியின் பின்னர் பொதுஜனபெரமுனவினால் தேசியப்பட்டியல் மூலம் முஸ்லிம் மக்களை பிரதிநிதிப்படுத்தும்முகமாக தெரிவுசெய்யப்பட்ட ஒருவர் “நாங்கள் முஸ்லிம்களின் வாக்குகளில் 35% - 40% இடைப்பட்ட வாக்குகளை அவர்கள் முஸ்லிம்களுக்கு சிறந்ததொரு ஒப்பந்தந்தத்தை வழங்குவார்கள் என உணர்ந்ததிலிருந்து பெரமுடிந்தது” எனக்குறிப்பிட்டார். இந்தக்கணக்கு புதிராகவே இருக்கின்றது. இருந்தாலும் அவரின் கருத்துப்படி முஸ்லிம்களின் 60% - 65% இடைப்பட்டவாக்குகள் பொதுஜனபெரமுனவிற்கு கிடைக்கவில்லை என்பதுதான் வெளிபடையாகும். இவ்வாறு வாக்களிப்பில் முஸ்லிம் சமூகத்தில் ஏற்பட்ட மாற்றம் ஒரு வரலாற்றுத்திருப்பம் ஆகும்,வழமையாக வெற்றிவாகை சூடும் கட்சியோடு அள்ளுப்பட்டுப்போவார்கள்.
செல்லுபடியற்றதான வாக்குகள்,வாக்களிக்காமை என்பவற்றை கருத்திற்கொள்ளாமல்விட்டாலும் எஞ்சியவாக்குகளில் ஒரு பெரும்பகுதி புதிதாக உருவாக்கப்பட்ட சஜித் பிரேமதாச வின் ‘சமகி ஜனபலவேகய’விற்கு வழங்கப்பட்டிருக்கின்றது. அதேவேளை முஸ்லிம்கள் கோட்டையாகவிருந்த ரணில்விக்ரமசிங்காவின் ஐக்கிய தேசியகட்சியை இம்முறை முஸ்லிம்கள் புறக்கணித்தனர், இலங்கை முஸ்லிம்களின் அரசியலைப்பற்றி பொதுமக்களிடம் “ புரியாணி சாப்பிடுவார்கள் யூஎன்பி ற்கு வாக்களிப்பார்கள் ” என்ற பிரபலமான சொல்லாடல் இருந்தது. 2020 இல் ஏற்பட்ட இந்த மாற்றத்தை எவ்வாறு ஒருவர் விளக்குவார்?
இந்த மாற்றம் எதிர்காலத்தில் தேசிய அரசியல் கட்சிகள் முஸ்லிம்களின் வாக்குகளை பெரவேண்டும் என்பதை உணரத்தலைப்படக்கூடிய ஆரம்பமா? அல்லது விக்ஷேட சந்தர்ப்பங்களினால் முஸ்லிம்களுக்கு ஆணையிடப்பட்டதா? என்ற கேள்வி எழுகின்றது. இக்கட்டுரையின் ஆசிரியர் விக்ஷேட சந்தர்ப்பங்கள் முஸ்லிம்களின் புதிய தலைமுறையை வாக்களிக்கும் நடைமுறையில் திருப்பத்தை ஏற்படுத்த தூண்டியுள்ளதாக நம்புகின்றார்.
ஏனைய சமூகங்களைப்போன்றே முஸ்லிம் வாக்காளர்களும் ஒரேமாதிரியானவர்கள்,அவர்களைப்போன்றவர்களே. இம்முறை தேர்தலில் வாக்களித்தவர்கள் இளம் சந்ததியினர் அதிகம் படித்தவர்கள் இவர்கள் தேர்தலில் பொய்யான வாக்குறுதிகளை முன்னைய சந்ததியினரைப்போன்று நம்பவில்லை. அவர்கள் முன்னையை கட்சிகளின் தலைவர்களின் வாக்குறுதிகளில் அவர்கள் நிறைவேற்றியதையும் நிறைவேற்றாததையும் பட்டியலிட்டார்கள். இது தேர்தலில் இதற்குமுன்னர் காணாத முன்னேற்றம் ஆகும். அதன்படி பிரதான இரண்டு அரசியல் கட்சிகளினதும் தலைவர்களான MR மற்றும் ரணில் விக்ரமசின்க ஆகிய இருவரும் குறிப்பாக 2009 ஆம் ஆண்டின் பின்னர் முஸ்லிம் சமூகத்தை பொருட்படுத்தவில்லை என்பதனை அவதானித்தார்கள்.
இந்த ஆண்டில்,2009 இல், தமிழீல விடுதலைப்புலிகள் அழிக்கப்பட்டனர்.இதனை தொடர்ந்து முஸ்லிம்களுக்கு எதிராக தீவிரபெளத்த குழுக்களினால் நாடெங்கும்ஸ் வன்முறைகள் முடுக்கிவிடப்பட்டன. இவ்வாறான அசம்பாவிதங்கள் நிகழும்போது இப்பெரும் இருகட்சிகளின் இருதலைவர்களும் முஸ்லிம் மக்களுக்கு ஆதரவாக குறைந்தது விரலையாவது உயர்ந்தவில்லை. இவற்றிற்கு பொருப்பானவர்கள் பிரதானமாக பொதுபல சேனாவின் ஞானசாரதேரரும் அக்கட்சியின் செயலாளர்ரும்தான். சிரிலங்கா முஸ்லிம் காங்கிரசினால் ஐக்கிய நாடுகளின் சிறுவர் மற்றும் மனித உரிமைகள் அமைப்பிற்கு (UNHCR) கையளிக்கப்பட்ட கடிதத்தில் முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக 2013 இல் மட்டும் அறங்கேற்றப்பட்ட 51 வன்முறைகள் குறிப்பிடப்பட்டிருந்தன.அவற்றில் பெரும்பான்மையானவை பொதுபலசேனா தொடர்புபட்டவை.
முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளின்போது சட்டமும் ஒழுங்கும் பேணப்படவில்லை என்பதை கல்வியளாலர்கள் சுட்டிக்காட்டினார்கள்.2014 ஜூன் நடுப்பகுதியில் அலுத்கமவில் முஸ்லிம்களுக்கு எதிரான கலவரத்தின்போதும் அப்படித்தான்.பெரும்பான்மை மக்களின் வாக்குகளில் சரிவை காண அன்றைய ஆட்சியாளர்கள் விரும்பவில்லைபோல் தோன்றியது.
2014 ஆம் செப்டம்பர் மாதத்தில் மியன்மாரின் தீவிர முஸ்லிம் எதிப்பு கொள்கையுடைய அசீன் விராத்துவை பொதுபலசேனா விக்ஷேட அழைப்பில் இலங்கைக்கு அழைத்தது. 2015 இல் நடைபெற்ற தேர்தல் வெற்றியை இலக்காகக்கொண்டு அதனை அன்றைய ஆட்சியாளர்கள் தடுக்கவில்லை. இந்நிகழ்வு முஸ்லிம் மக்களுக்கு புண்ணின் உப்பை தேய்ப்பதனைப்போன்ற வேதனையான செயலாக அமைந்தது எனலாம். இவற்றின் விளைவாகவே 2015 பொதுதேர்தலில் MR ஐ முஸ்லிம்கள் அங்கிகரிக்கவில்லை.
தொடர்ந்து ஆட்சிக்குவந்த மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாகவும் ரணில்விக்ரமசிங்கவை பிரதமராகவும் கொண்ட யஹபாலன ஆட்சியினரும் இதே போக்கையே பின்பற்றினர். 2015 – 2019 இற்குமிடைப்பட்ட காலத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான பல கலவரங்கள் வெடித்தன.
2019 ஏப்ரலில் இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலை தேசிய தவ்ஹீத் ஜமாத்தை சேர்ந்த சஹ்ரானின் பயங்கரவாதக்குழுவினர் மேற்கொண்டபோது அதனை நடைபெறாமல் தடுக்க யகபாலன அரசு தவறிவிட்டது. ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் இயல்பாகவே முஸ்லிம் எதிர்ப்பு கொள்கையுடைய பொதுபலசேனாவின் செயற்பாடுகளை மேலும் தீவிரப்படுத்தியது.
விராத்துவிற்கு MR செங்கம்பளம் விரித்ததுபோல சிறிசேனவும் ரணிலும் ஞானசாரவின் ஆறு ஆண்டு சிறைத்தண்டனையை குறைத்து மன்னிப்புவழங்கி விடுதலை செய்தனர்.
2019 இல் GR ஜனாதிபதியானார்.
நெலுந்தெனியவில் பள்ளிவாசலுக்கு முன்பாக நடு இரவில் முளைத்த புத்தர் சிலை,மகர சிறைச்சாலையில் அமைந்திருந்த பள்ளிவாசலை சிறைக்காலலாளிகளின் ஓய்வறையாக மாற்றியமை,கோவித் – 19 இனால் மரணிப்பவர்களை உலக சுகாதாரதாபனத்தின் முடிவுகளுக்கு இணங்காமல் எரிப்பதற்கு விடாப்பிடியாக இருப்பது,ஒரு நாடு ஒரு சட்டம் என்பதெல்லாம் முஸ்லிம்களை நோவினை செய்வனவாகும். பொதுபலசேனா மற்றும் தீவிரமுஸ்லிம் எதிர்ப்பு குழுக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமை என்பன MR ற்கு தேர்தலில் வாக்களிப்பதனின்றும் முஸ்லிம்களை தடுத்தது எனலாம். இந்நிலைமையில் சஜிதிற்கு வாக்களிப்பதனை தவிர வேறு வழி முஸ்லிம்களுக்கு இருக்கவில்லை. சஜித்திற்கு வாக்களித்தமையை அவரின் கொள்கைகள் சித்தாந்தங்களை முஸ்லிம் மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர் எனக் கொள்ளமுடியாது.
எனவே முடிவாக 2020 பொதுத்தேர்தல் முஸ்லிம்களில் வாக்குகளை அளிக்கும் முறையில் திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது என்ற முடிவிற்கு வருவது பாதுகாப்பானது.
முஸ்லிம்களுக்கு எந்தவொரு அரசிடம் இருந்தும் சிறப்புச்சலுகைகள் தேவையில்லை ஆனால் நீதியும் சமத்துவமுமே தேவை.அவை அவர்களின் ஜனநாயக உரிமைகள்.
ராஜபக்ஷ அவற்றை வழங்குவாரா?
தமிழ் மொழியாக்கம்: AKBAR RAFEEK
இவங்களுக்கு பள்ளிக்கு போய் தொழ ஏலா ஆனா building மட்டும் வேணும்னா எப்பிடி....... Save our masjiths by prayers
ReplyDeleteஅப்படியானால் இப்போதிருக்கும் சிறப்புச் சலுகைகளும் தேவையில்லையா
ReplyDelete