Header Ads



விக்னேஸ்வரனுக்கு உதய கம்மன்பில சவால்


இலங்கையின் ஆரம்ப குடிகள் தமிழ் மக்களா என்பது சம்பந்தமாக பகிரங்க விவாதத்திற்கு வருமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கு சவால் விடுப்பதாக பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

பிவித்துரு ஹெல உறுமய கட்சி இன்று -26- கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

9வது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வில், புதிய நாடாளுமன்ற சபாநாயருக்கு வாழ்த்து தெரிவித்து உரையாற்றிய விக்னேஸ்வரன், தமிழ் மொழி உலகில் பழமையான மொழி எனவும் இலங்கையின் ஆரம்ப குடிகள் தமிழ் மக்கள் எனவும் கூறியதை முற்றிலும் பொய்யானது.இந்த விடயத்தில் செய்ய வேண்டியது விக்னேஸ்வரனுக்கு எதிர்ப்பை வெளியிடுவதல்ல. அந்த தகவல் முற்றிலும் பொய்யானது என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

தமிழ் மக்களின் நிலைப்பாடுகளுக்கு அமைய தமிழ் மொழி கிறிஸ்துவுக்கு முன் மூன்றாம் நூற்றாண்டில் உருவானது. கிரேக்கம், அரபு, சீனம், பாக்க் ஆகிய மொழிகள் தமிழை விட பழமையானவை என்பது விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். அத்துடன் இலங்கை தமிழர்களுக்கு ஒல்லாந்தர் காலம் வரை வரலாற்று நூல்கள் எதுவும் இருக்கவில்லை. இதனால், விக்னேஸ்வரன் இரண்டு வாதங்களும் முற்றிலும் பொய்யானவை.

விக்னேஸ்வரன்களின் பிரிவினைவாதத்தை வடக்கில் உள்ள மக்கள் நிராகரித்துள்ளனர் என்பது தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அங்கஜன் ராமநாதன் மற்றும் ஈபிடிபியின் டக்ளஸ் தேவானந்த ஆகியோர் விக்னேஸ்வரனை விட அதிகமான தமிழ் மக்களின் விருப்பத்தை வென்றுள்ளனர். விக்னேஸ்வரன் போன்றவர்களின் வாதங்களை ஏற்றுக்கொள்ள வடக்கில் உள்ள தமிழ் மக்கள் கூட தயாரில்லை எனவும் கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.

3 comments:

  1. It is shame for A great scholar like former supremacy court judge Vignesiwaran to debate with cheat like Gamanpille (still case pending for cheating a foreign lady) He will not understand anything History orLanguage.Ignore him sir

    ReplyDelete
  2. MR.VICKEY IS CORRECT.BUT THIS TYPE OF TAMILS HISTORY HAS BEEN SPOKEN IN PARLIAMENT FROM 1948 BY LATE SELAVANAYAGAM,AMIRTHALINGAM AND SIVASITHAMPARAM AND SINCE OF LATE BY SAMPANTHAN,SUMANTHIRAN,OVER 100 TIMES.WHAT IS THE GAIN FOR TAMILS BY JUST SHOUTING ITS ONLY HELP THIRD GRADE PEOPLE LIKE GONPULLE AND WIMAL WEERAYA TO COME OUT WITH BIG TALK AND BECOME MORE POPULAR AMONG SINGALEASE AND GET MORE VOTES.NO GAIN AT ALL FOR TAMILS.

    ReplyDelete
  3. In this regard C Vicneshwaran is right, according to the history hindu tamils and Waddas were became Sinhalies after the Budist monk brought Buddah ideology to Sri Lanka. Then from some Sinhales and Tamils became Muslims and foreign Muslims Married to Locals so on Islam spread in Sri Lanka . In brief all are origin of Sri Lanka.

    ReplyDelete

Powered by Blogger.