அரியவகை உயிரினம் முல்லைத்தீவில் கண்டுபிடிப்பு
போடிலிமா என்று அழைக்கப்படும் பல்லி இலங்கைக்குச் சொந்தமானது.
விஞ்ஞான ரீதியாக லைரியோசெபாலஸ் ஸ்கூட்டடஸ் என்று அழைக்கப்படும் இந்த பல்லி 25 முதல் 1650 மீற்றர் வரையிலான தாழ்வான பகுதிகளிலும் மத்திய மலைப்பகுதிகளிலும் அரிதாகவே காணப்படுகிறது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயாளர் பரிவிலுள்ள தேவிபுரம் பகுதியில் வீதி நிர்மாண வேலையில் ஈடுபட்டிருந்த பொறியியலாளர் மஞ்சுளா ஹேவவிதாரண இன்றையதினம் இதனை கண்டு பிடித்தார்.
போடிலிமா இரவில் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் ஒலி எழுப்புவதால் கிராம மக்கள் பயப்படுகிறார்கள்.
ஆபத்தான போடிலிமா 2009 முதல் சிவப்பு பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளது.
Post a Comment