எனக்கு முழு அமைச்சுத்தான் வேண்டும், ராஜாங்க அமைச்சு தேவையில்லை - விஜயதாச பிடிவாதம்
ஒரு போதும் தான் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சு பதவியை தவிர ராஜாங்க அமைச்சு பதவியை வகித்ததில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் ஆலோசகர் லலித் வீரதுங்கவை தொலைபேசியில் தொடர்புக்கொண்டு அவர் இதனை கூறியுள்ளார்.
விஜயதாச ராஜபக்சவுக்கு உயர் கல்வி ராஜாங்க அமைச்சர் பதவி ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிந்து கொண்ட பின்னர், அவர், ஜனாதிபதியின் ஆலோசகரை தொடர்புகொண்டு இதனை குறிப்பிட்டுள்ளார்.
ராஜாங்க அமைச்சர்களுக்கான எந்த நிறுவனங்களும் வர்த்தமானி அறிவித்தல் மூலம் பகிரப்படவில்லை எனவும் விஜயதாச ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார்.
தனக்கு பொய்யான அமைச்சு பதவிகள் தேவையில்லை எனவும் அப்படியான அமைச்சு பதவிகளை தான் பெற்றுக்கொள்வதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ராஜபக்ச கெபினெட்டின் - வெள்ளாட்டு மந்தையின் கருப்பாடு!
ReplyDeleteBetter not give him nothing.
ReplyDeleteஅவன்கார்ட் விவகாரத்தில் பயங்கர சூழ்ச்சி செய்த இவருக்கு முழு அமைச்சுப் பதவியல்ல, முழு மையான சி றையில் 100 வருடங்கள் அ டைத்து வைக்க வேண்டும்.
ReplyDeleteமுஸ்லீம் கட்சிகள் சேர்ந்து ஆட்சி அமைக்கும் போது முக்கியமான அமைச்சுக்களை அவர்கள் பெற்றுக்கொள்கிறார்கள் தமக்கு உழைக்கக்கூடிய அமைச்சுக்கள் கிடைப்பதில்லை என்ற ஆதங்கத்தில் தான் இவர் இனவாதம் பேச ஆரம்பித்தார். முஸ்லீம்கள் இல்லாத ஆட்சியில் இருந்ததும் இல்லாமல் போய்விட்டது. பேராசை பெருந்தரித்திரியம் என்பது இதைத்தானோ?
ReplyDelete