புதிய சபாநாயகர் யார்..?
பாராளுமன்றம் ஆகஸ்ட் 20 ஆம் திகதி முற்பகல் 9.30-க்கு கூடும் என்ற ஜனாதிபதியின் அறிவிப்பு நேற்று (13) வெளியிடப்பட்டது.
அரசியலமைப்பின் 70ஆவது சரத்தின் அதிகாரங்களுக்கு அமைய, பாராளுமன்றத்தைக் கூட்டுவதற்கான அறிவிப்பை ஜனாதிபதி வௌியிட்டுள்ளார்.
பாராளுமன்றத்திற்கு மக்களின் வாக்குகளால் நேரடியாக 196 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன், தேசியப் பட்டியலின் மூலம் 27 உறுப்பினர்கள் இதுவரை நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஐக்கிய தேசியக் கட்சி, எமது மக்கள் சக்தி கட்சி ஆகியன தேசியப் பட்டியல் தொடர்பில் இறுதித் தீர்மானத்தை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு இதுவரை அறிவிக்கவில்லை.
இந்நிலையில், ஆகஸ்ட் மாதம் 20 ஆம் திகதி பாராளுமன்றம் கூடுவதற்கு எவ்வாறான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன, புதிய பாராளுமன்றத்தின் சபாநாயகர் யார் என்பது தொடர்பில் தற்போது அதிகம் பேசப்படுகின்றது.
இதற்காக குறிப்பிடப்படும் பெயர்களில், மஹிந்த யாப்பாவின் பெயரும் முக்கிய இடம்பெறுகின்றது.
இந்த விடயம் தொடர்பில் அவர் இவ்வாறான பதிலை வழங்கினார்,
சபாநாயகர் பதவி இன்னும் கிடைக்கவில்லை. கிடைத்த பின்னர் உச்சபட்சம் செயற்பட முடியும்
Post a Comment