Header Ads



கணிசமானளவு முஸ்லிம்கள் பொதுஜன பெரமுனவுக்கு வாக்களித்துள்ளார்கள் - பாரிஸ்

- இக்பால் அலி -

கண்டி மாவட்டத்தில் நான் முதல் முறையாக அரசியலில் காலடி எடுத்து வைத்த எனக்கு இன மதபேதமின்றி என் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த  அனைத்து  இன மக்களுக்கும் என்னுடைய உள்ளார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்று கண்டி மாவட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனவில் போட்டியிட்ட ஏ. எல். எம். பாரிஸ் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்

உண்மையிலேயே கண்டி மாவட்ட வாழ் முஸ்லிம்கள் நான் தேர்தல் மேடைகளில் முன் வைத்த அரசியல் கருத்துக்களுக்கு இணங்க மக்கள் உரிய அங்கீகாரத்தை வழங்கி கணிசமானளவு மக்கள் வாக்களித்துள்ளார்கள். புதிதாக அமைந்துள்ள  பாராளுமன்றத்தில் முஸ்லிம்களும் ஒரு பாங்காளிகளாக உள்ளார்கள் என்ற வகையில் மனதிற்கு சந்தோசமாக இருக்கிறது.  

ஏனென்றால் காலம் காலமாக ஐக்கிய தேசிய கட்சிக்கு வாக்களித்த வந்த கண்டி வாழ் முஸ்லிம்கள் இம்முறை வரலாற்றில் இல்லாதவாறு முதல் தடவையாக கணிசமானளவு முஸ்லிம்கள் ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனவுக்கும் தங்களுடைய வாக்குகளைப் பதிவு செய்துள்ளார்கள்.  இவ்வெற்றியில்  முஸ்லிம்களும் பங்காளிகளாக இடம்பிடித்துள்ளமை என்பதனை எனக்கு கிடைத்த வாக்குகள் நிரூபிக்கின்றன. 

கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது முஸ்லிம்கள்  பங்களிப்புச் செய்யவிட்டாலும் ஜனாதிபதியின்  குறுகிய கால ஆட்சியில்  அவரது நல்ல தலைமைத்துவப் பண்பைப்  பார்த்து நாட்டின் அனைத்து இன மக்களுக்கும் மிகப் பொருத்தமான தலைவர் கோத்தபாய ராஜபக்ஷதான் என்ற வகையில் அவருடைய கரத்தை முஸ்லிம்கள் பலப்படுத்தியுள்ளார்கள்.

எல்லோரும் ஒரு பக்கம் சாயாமல் பெரும்பான்மையின  சிங்கள மக்கள் ஆதரிக்கும் கட்சியுடன்  முஸ்லிம்களும் ஒற்றுமையுடன் சேர்ந்து போக வேண்டும் என்ற  என்னுடைய கருத்துக்களை ஏற்று நல்ல விவேகமான சிந்தனையுடன்  ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனவுக்கு இம்முறை வாக்களித்து வெற்றியில் பங்காளிகளாக மாறிக்கொண்டமை ஒரு சாமார்த்தியமாக விடயம் என நான் கருதுகின்றேன்.

என் கருத்துக்களை ஏற்றுக் கொண்டு எனக்கு வாக்களித்த மக்களுக்கு அவர்களுடைய நலன்சார்ந்த விடயங்களில் என்னையும் இணைத்துக் கொண்டு செயற்படுவேன்.

எவ்வாறாயின் தற்போதுள்ள தேர்தல் முறைமைக்கு ஏற்ப எதிர்காலத்தில் முஸ்லிம் சமூகப் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்ய வேண்டுமாயின் கண்டி மாவட்டத்தில் முஸ்லிம் தரப்பில் ஆளும் தரப்பில் ஒரு பிரதிநித்துவத்தைப் பெற்றுக் கொள்வதே புத்திசாலினத் தனமாக இருக்கும்.  இதனை சரியாக ஆராய்ந்து முஸ்லிம் பிரதிநித்துவத்தைப் பெற்றுக் கொள்வதற்கு எதிர்காலத்தில் செயற்பட வேண்டும். எனது வெற்றிக்காகவும் எனக்கு வாக்களித்த மக்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

1 comment:

  1. உங்களுக்கு எத்தனை வாக்குகள் கிடைத்தன?

    ReplyDelete

Powered by Blogger.