Header Ads



பொத்துவில், சம்மாந்துறை, கல்முனை தொகுதிகளில் மக்கள் உற்சாகத்துடன் வாக்களிப்பு


- பாறுக் ஷிஹான் -

2020 ஆம் ஆண்டிற்கான பாராளுமன்ற  தேர்தல்   அம்பாறை மாவட்டத்தில் சுமூகமாகவும் மந்த கதியிலும் இடம்பெற்று வருகின்றது.

குறிப்பாக திகாமடுல்ல தேர்தல்  மாவட்டத்தில்  அம்பாறை ,பொத்துவில் , சம்மாந்துறை  ,கல்முனை,ஆகிய தேர்தல் தொகுதிகளில் உள்ள வாக்களிப்பு நிலையங்களில் வாக்காளர்கள்  ஆர்வத்துடன் வாக்களிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் வாக்கு சாவடிகளுக்கு   பொலிஸ்  மற்றும் விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பு வழங்கி வருகின்றனர்.

525  வாக்களிப்பு நிலையங்களில்  513979 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள இத்தேர்தலானது சுகாதார நடைமுறைக்கமைய இடம்பெற்று வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

அம்பாறை மாவட்டத்தின் திகாமடுல்ல தேர்தல் தொகுதியில் 7 ஆசனங்களுக்காக 20 க்கும் அதிகமான அரசியல் கட்சிகளும்  பல சுயேட்சைக்குழுக்களும் களமிறங்கி உள்ளன.

இதே வேளை அம்பாறை கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சில இடங்களில் இரு வேறு கட்சி ஆதரவாளர்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் சம்பவத்தினால் 5 மோட்டார் சைக்கிள் மற்றும் வீடு ஒன்றும் பாரிய சேதமைந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இத்தேர்தலில் கல்முனை  தேர்தல் தொகுதியில் 76283  பேரும் சம்மாந்துறை  தேர்தல் தொகுதியில் 89057 பேரும் பொத்துவில்  தேர்தல் தொகுதியில் 143229  பேரும்  அம்பாறை   தேர்தல் தொகுதியில் 174385  பேரும்  வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

தேர்தல் கடமைக்காக இம்மாவட்டத்தில் 7000 அரச உத்தியோகத்தர்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.மேலும் வாக்குகள் எண்ணும் நிலையங்கள் 74  இம்மாவட்டத்தில் உருவாக்கப்பட்டுள்ளன.அத்துடன் சுதந்திரமானதாகவும் நடுநிலையாகவும்  தேர்தலை நடத்துவதற்கான சகல நடவடிக்கையும்  தேர்தல் திணைக்களம் முன்னெடுத்துள்ளது.

No comments

Powered by Blogger.