அநீதம் தோற்ற, நாளை கொண்டாடுவோம்...!
Ash -Shikeh Husni Haniffa ( Naleemi)
அரபு நாட்காட்டியில் முதன்மையான முதல் மாதம் முஹர்ரமாகும் , போராட்டமும் இரத்தம் சிந்துவதும் , வீண் தர்க்கங்களும் தடுக்கப்பட்டு சகோதரத்துவமும் , ஒற்றுமையும் , ஒருமைப்பாடும் , புரிந்துணர்வும் , சக வாழ்வும் விதியாக்கப்பட்டு சிறப்பிக்கப்பட்ட மிக முக்கியமான மாதமாகும் . வரலாற்று சிறப்புமிக்க மிகப் பெரிய ஒரு வெற்றியும் ,நோன்பு நோற்று அதனை கொண்டாடும் சிறப்பும் இம்மாதத்துக்;கு உண்டு.
ஆம் அமைதியான வாழ்க்கைக்கு மிகப் பெரிய எதிரி அநீதமாகும் . அநீதமும் , அராஜகமும் , கொடுங்கோளும் கோளோச்சும் அண்டவெளியில் நீதமும் , நியாயமும் , சத்தியமும் , சுதந்திரமும் , இயல்பு வாழ்க்கையும் முகவரி தெரியாமல் போகும்.
குரல்வளைகள் நசுக்கப்பட்டு, உரிமைகள் கொடுங்கோள் எனும் இரும்புப் கரம் கொண்டு மறுக்கப்பட்டு , சுயத்தையம் , கௌரவத்தையும் ஒரு நாள் வயிற்றுப்பசிக்காக விற்று அநீதியின் அடிமைகளாக வாழ நிர்பந்திக்கப்படும் யுகம் கழியுகமே.
சிறு குழுவின் சுகபோக வாழ்வுக்காக மனித விழுமியங்கள் கட்டுடைக்கப்படுவது அநீதியே . தன்னாதிக்க சக்தியின் எதிர்கால நலனுக்காக அப்பாவி உயிர்களின் இரத்தம் குடிப்பது அநீதியே , சத்தியம் பேசுகின்றவர்களை , நீதத்துக்கு குரல் கொடுக்கின்றவர்களை கேள்வி கணக்கின்றி போட்டு தள்ளுவது அநீதியே , தன்னுடைய ஏகோபோக வாழ்வுக்கு பொது சிவிலியன்களது சொத்துக்களை திருடுவது , பொதுச் சொத்தை கைக்கூலியாக கொடுத்து தன் தேவைகளை நிறைவேற்றும் சூழலை கட்டமைப்பது மிகப்பெரும் அநீதியே , தன் எதிரியின் நீதத்தை மறுக்க எதிரியையே அநியாயக்காரனாக சித்திரிப்;பது, ஜன சமூகத்தின் சமூக விரோதியாக முத்திரை குத்துவது நீதிக்காக ஏங்கும் மானிடத்துக்கு செய்யும் மிகப் பெரிய அநீதயே.
அநீதியின் இத்தனை வடிவங்களையும் தன்னகத்தே சுமந்து வாழ்ந்த மிகப் பெரிய அநியாயக்காரன் , அநீதத்தின் பல வடிவங்களை அநியாய கூட்டத்திற்கே பாடமெடுத்த பிர்அவனும் அவனது அராஜக கோட்டையும் வீழ்ந்த வரலாற்றை மீண்டும் நினைவுபடுத்தும் நாள் (2020.08.23) எம்மை நோக்கி வருகின்றது.
உண்மையில் அநீதம் தோற்கடிக்கப்பட்ட நாளை சந்தோசமாக கொண்டாட வேண்டும் , அநீதத்துக்கு எதிரான நீதியின் வெற்றியை ஞாபகப் படுத்தி இன்புற வேண்டும் , அராஜக கோட்டைகளின் சரிவை வாழ்நாளில் கண்டு இன்புறும் பாக்கியம் போல் வேறெந்த இன்பமான காட்சியையும் அநீதம் இழைக்கப்பட்டவர்கள் அனுபவிக்க மாட்டார்கள். வரலாற்றில் நடந்த அநீதிகளின் தோல்வியை , அட்டூழியங்களின் , அடக்குமுறைகளின் அழிவு பற்றிய செய்திகளை போல காதுக்கு இன்பமான ஓர் ஒளடதம் வேறு ஒன்றும் கிடையாது.
யார் இந்த பிர்அவன்
1.சத்தியத்தை , உண்மையை நோக்கி அழைத்த மூஸாவை பல தடவை கொலை செய்வதற்கு முயன்றான்.
2.தான் தான் கடவுள் என்ற தோறனையில் தன் சுகத்துக்காக சிவில் சமூகத்தை அடிமைகளாக்கினான்.
3. தன் எதிர்கால அராஜக அரசின் சரிவை பயந்து சமூகத்தின் பிறக்கின்ற பச்சிளம் பாலகர்கள் அனைவரையும் கொன்றே குவித்தான்.
4. நீதியை உணர்ந்து உன்மையின் பக்கம் சார்ந்தோரை மாறுகால் மாறுகை துண்டித்து கொன்று குவித்தான்.
5. அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுத்தோரை , அராஜக அரசியலை எதிர்த்தோரை பூண்டோடு அழிப்பதற்கு செங்கடல் வரை துரத்திச் சென்றான்.
6. தன் விருப்பம் தான் சட்டம் , தன் யோசனைகள் தான் சிவில் சமூகத்தின் பேச்சும் , சடத்தையும் , சேவையும் , மூச்சும் இருக்க வேண்டும் என ஏதோச்சதிகார போதையில் அழைந்தான்
இப்படிப்பட்ட ஒரு சர்வதிகாரியின் முன்னிலையில் துணிவோடு நின்று கடைசிவரைக்கும் சத்தியத்தை , வாழ்வின் யதார்தத்தை அதன் உயர் இலட்சியங்களை , மரணத்துக்கு பின்னரான வாழ்வின் புரிதலை எடுத்துச் சொல்லி
சமூக நீதியை , உண்மையை , மக்கள் ஆணையை , மானுடவியல் பெருமானத்தை , சுதந்திரக் காற்றை உறுதிப்படுத்தியவரே எம் தோழர் மூஸா (அல்லாஹ் அவரை பொருந்திக் கொள்ளட்டும்)
பிர்அவ்னிய சர்வதிகாரியும் பிர்அவ்னிய சர்வதிகார சாம்ராஜ்யமும் ஆழ்கடலில் மூழ்கடிக்கப்பட்ட நாள் அந்த சமூகத்துக்கான விடிவாக அமைந்ததைப் போல அநீதத்துக்கு எதிராக போராடும் அனைவரினதும் உள மகிழ்வுக்கு காரணமாக அமைகிறது.
எனவேதான் யூத சமூகமும் , இஸ்லாமிய சமூகமும் குறித்த தினத்தை நன்மைகளை புரிந்து கொண்டாட வேண்டும் என்ற நோக்கில் அன்றைய தினம் நோன்பு நோற்று முழு மானிட சமூகத்திற்கும் நீதியின் வெற்றியை நன்மைகளால் ஞாபகப்படுத்தகின்றனர்.
இறை தூதர் முஹம்மத் நபி (அல்லாஹ் அவரை பொருந்திக் கொள்ளட்டும்) ஒரு தடவை மதீனாவுக்குள் நுழைந்த போது யூத சமூகம் நோன்பு நோற்றிருந்தார்கள் . அப்போது அவர்களை நோக்கி நோன்புக்கான காரணத்தை கேட்ட போது, இன்றைய நாள் மூஸா(அலை) பிர்அவ்னை வெற்றி கொண்ட நாள் என்று கூறினார்கள் , அப்போது இறை தூதர் நாங்கள் தான் மூஸாவுக்கு மிகவும் நெருக்கமானவர்கள் என்று கூறி குறித்த நாளில் நோன்பு நோற்பதை முஸ்லீம்களுக்கும் வலியுறுத்தினார்கள்.
எனவே வருகின்ற சனி மற்றும் ஞாயிறு தினங்களில் நோன்பு நோற்று குறித்த வெற்றியை உலகத்தாருக்கு மீண்டும் ஒரு தடவை ஞாபகப்படுத்துவோம்.
Post a Comment