Header Ads



தேசிய பட்டியல் கிடைக்காவிட்டால் அரசியலில் இருந்து ஓய்வுப்பெற்று, உணவுண்டு நித்திரைக்கொள்வதே சிறந்தது

தாம் அரசியலில் இருந்து ஓய்வு பெறவும், ஓய்வெடுக்கவும் தயாராவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் அமரதுங்க அறிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினருக்கான ஆசனம் ஒன்று கிடைத்தது.

எனினும் இதுவரை அந்த ஆசனத்துக்கு எவரும் நியமிக்கப்படவில்லை.

கட்சியின் மூத்த உறுப்பினர் என்ற அடிப்படையில் தமக்கே அந்த ஆசனம் வழங்கப்பட வேண்டும்.

எனினும் அந்த வாய்ப்பு வழங்கப்படாது போனால் இருந்து பிரயோசனம் இல்லை என்ற அடிப்படையில் அரசியலில் இருந்து ஓய்வுப்பெற்றுவிட்டு உணவு உண்டு நித்திரைக்கொள்வதே

சிறந்தது என்று எண்ணியுள்ளதாக ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

4 comments:

  1. Yes you can eat n sleep with publics money.good you n ranil still greedy

    ReplyDelete
  2. என்பது வயதாகி, முப்பாட்டனுடாகியும் இன்னும் அரசியலில் இருந்து விலகவிருப்பமில்லை. கடைசியாக உல்லாசப்பிரயாணத்துறைக்குப் பொறுப்பான அமைச்சராக இருந்து உருப்படியாக அந்தத்துறையை முன்னேற்ற எந்த ஆக்கபூர்வமான முயற்சிகளும் எடுத்ததாகத் தெரியவிருல்லை. ஆனால் தேர்தல் தொகுதி மக்களின் வாக்களிக்காது துரத்திவிட்ட போதிலும் எங்கோ இருக்கும் எட்டமுடியாக தேசியப்பட்டியலைப் பார்த்து எச்சில் ஊரும் வீணாப் போன அரசியல்வாதி. இதுபோன்ற அனைத்து கிழவன்களையும் இனிவரும் தேர்தல்களிலாவது பொது மக்கள் துரட்சி பண்ணி படித்த வாலிபர்களுக்கு இடமளிக்க வேண்டும்.

    ReplyDelete
  3. It is better to sleep at home rather sleep in the Parliament like other greeds.

    ReplyDelete

Powered by Blogger.