Header Ads



ஆளும் கட்சியின் உறுப்பினர்களுக்கு, எதிர்க்கட்சி பகுதியில் ஆசனங்கள் ஒதுக்கீடு


கொரோனா வைரஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளின் கீழ் நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சியின் உறுப்பினர்களுக்கும் எதிர்க்கட்சியின் ஆசனப்பகுதியில் ஆசனங்கள் ஒதுக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.


நாடாளுமன்ற படைக்கள சேவிதர் நரேந்திர பெர்ணான்டோ இதனை தெரிவித்துள்ளார். ஆளும் கட்சியில் புதிய நாடாளுமன்றத்தில் 150 பேருக்கும் அதிகமானோர் உள்ளனர்.


எனினும் நாடாளுமன்றில் சுகாதார ஒழுங்கு விதிகளின்படி 116 ஆசனங்களையே ஒதுக்கமுடியும்.


எனவே எஞ்சிய ஆளும் கட்சியினருக்கான ஆசனங்களை எதிர்க்கட்சியினர் பக்கம் தனியாக ஒதுக்கவேண்டியேற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


இதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான பதிவுகள் யாவும் இணையத்தின் மூலமே மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் பெர்ணான்டோ அறிவித்துள்ளார்.


இதேவேளை, இலங்கையின் ஒன்பதாவது நாடாளுமன்ற அமர்வுகள் ஆகஸ்ட் 20ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.