வாக்காளர்களுக்கு பணத்தையும், பொருட்களை வழங்கும் வேட்பாளர்கள் - ஆசனங்களை இழப்பீர்கள் தேசப்பிரிய எச்சரிக்கை
வாக்காளர்களுக்கு வேட்பார்ளர்கள் பணம் வழங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர் என எச்சரித்துள்ள தேர்தல் ஆணையகம் பணம் வழங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு குற்றவாளிகள் என நிருபிக்கப்படுபவர்கள் நாடாளுமன்ற ஆசனங்களை இழக்கநேரிடலாம் எனவும் தெரிவித்துள்ளது.
தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய இதனை தெரிவித்துள்ளார்.
வேட்பாளர்கள் வாக்காளர்களுக்கு சேலைகள்,மதுபானம் அரிசிபோன்றவற்றை வழங்குகின்றனர் என்ற தகவல்கள் கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் என குற்றச்சாட்டு நிருபிக்கப்பட்டால் நாடாளுமன்ற ஆசனம் பறிக்கப்படலாம் என மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
அவர்கள் பிடிபட்டால் இந்த விடயம் நீதிமன்றம் வரை கொண்டுசெல்லப்படும் குறிப்பிட்ட வேட்பாளர் வெற்றி பெற்றிருந்தால் அவரது ஆசனம் பறிபோகலாம் எனவும் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
இதேவேளை அனேகவாக்காளர்கள் யாருக்கு வாக்களிப்பது என ஏற்கனவே தீர்மானித்துள்ளதால் பணம் வழங்கும் நடவடிக்கைகளால் தங்கள் முடிவுகளில் மாற்றங்களை மேற்கொள்ளமாட்டார்கள் எனவும் மகிந்ததேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
வாக்காளர்களுக்கு பணம் பொருட்களை வழங்க முற்படுபவர்கள் ஸ்மார்ட்போன்கள் மூலம் அம்பலப்படுத்தப்படுவார்கள் எனவும் மகிந்ததேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
Post a Comment