Header Ads



நிர்வாணமாக உள்ள ரணிலை பதவி விலக வலியுறுத்தல் கருவும் வேண்டாமென ஆதரவாளர்கள் பிடிவாதம்


ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டம் இன்றும் கட்சியின் தலைமைத்துவம் மற்றும் தேசியப் பட்டியல் ஆசனம் தொடர்பிலான இறுதித் தீர்மானமின்றி நிறைவு பெற்றது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் இன்று -25- பிற்பகல் செயற்குழு கூடியது 

சுமார் மூன்று மணித்தியாலங்களாக நடைபெற்ற கூட்டம் இறுதித் தீர்மானம் இன்றி முடிவுக்கு வந்தது.

இந்நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து ரணில் விக்ரமசிங்கவை விலகுமாறு வலியுறுத்தி, முன்னாள் நகர சபை உறுப்பினர் ஃபஸ்லான் ஃபரோஸ் உள்ளிட்டோர் களுத்துறை கடுகுருந்த பகுதியில் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதன்போது, களுத்துறை நகர சபையின் முன்னாள் உறுப்பினர் ஃபஸ்லான் ஃபரோஸ் தெரிவித்ததாவது,

இப்போதேனும் விலகுமாறு ரணில் விக்ரமசிங்கவிடம் கேட்கின்றோம். அவர் நிர்வாணமாக உள்ளார். அவர் ஆடை அணிந்து கொண்டு அரசியலில் ஈடுபடவில்லை. சர்வதேச ரீதியில் அவர் ஏற்றுக்கொள்ளப்பட்டாலும், உள்நாட்டில் அவருக்கு அங்கீகாரம் இல்லை. இப்போதேனும் ஓய்வெடுங்கள். கரு ஜயசூரிய, பதினேழு உறுப்பினர்களுடன் சென்று மஹிந்த ராஜபக்ஸவுடன் இணைந்துகொண்டமை உங்களுக்குத் தெரியும். அவர் அதனை மறந்துவிட்டார். மக்கள் எதிர்பார்க்கும் ஏழைகளின் துயர் அறிந்த தலைவரையே ஆட்சிக்குக் கொண்டு வருவோம். கரு ஜயசூரியவோ வேறு யாருமோ இந்த நாட்டின் ஆட்சியாளராக முடியாது

2 comments:

  1. Very Good. Everyone has to go and Put that culprit out of UNP Leadership... Shameful UNP Leader. He Destroyed UNP.

    ReplyDelete
  2. ‘நீங்கள் ஆட்சிப் பதவியை அடைய பேராசைப் படுகிறீர்கள். ஆனால் மறுமை நாளில் அதற்காக வருத்தப்படுவீர்கள். பாலூட்டுபவை தரும் இன்பங்களிலேயே பதவிப்பால் தான் இன்பமானது. பாலை மறக்க வைப்ப(தன் துன்பத்)திலேயே பதவிப் பாலை நிறுத்துவது தான் மோசமானது. (நூல்: புகாரி)

    ReplyDelete

Powered by Blogger.