அருகிலிருந்து செவிமெடுக்கும் அல்லாஹ்வே..!
நீ மட்டும்தான் எங்கள் உள்ளத்திலுள்ள தேவைகளை அறியும் வல்லமையுள்ளவன்.
எங்களின் பலவீனங்களின் மீது இரக்கம் கொள்வாயாக! எங்களின் அச்சத்தைப் போக்குவாயாக! எங்களின் உள்ளங்களில் மகிழ்ச்சியை உருவாக்குவாயாக! அனைத்துத் துன்பங்களையும் எங்களை விட்டுத் தூரமாக்குவாயாக!
رَبَّنَآ اٰتِنَا فِى الدُّنْيَا حَسَنَةً وَّفِى الْاٰخِرَةِ حَسَنَةً وَّ قِنَا عَذَابَ النَّارِ
“ரப்பனா! (எங்கள் இறைவனே!) எங்களுக்கு இவ்வுலகில் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக; மறுமையிலும் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக; இன்னும் எங்களை (நரக) நெருப்பின் வேதனையிலிருந்தும் காத்தருள்வாயாக!” (2:201)
رَبَّنَاۤ اٰتِنَا مِنْ لَّدُنْكَ رَحْمَةً وَّهَيِّئْ لَـنَا مِنْ اَمْرِنَا رَشَدًا
“எங்கள் இறைவா! நீ உன்னிடமிருந்து எங்களுக்கு ரஹ்மத்தை அருள்வாயாக! இன்னும் நீ எங்களுக்கு எங்கள் காரியத்தை(ப் பலனுள்ளதாக)ச் சீர்திருத்தித் தருவாயாக!” (18:10)
எங்கள் ரப்பே! அகிலத்தைப் படைத்து பாதுகாத்து வரும் இரட்சகனே!
Post a Comment