ஒரு சமுதாயத்தின் மீது அச்சுறுத்தலை ஏற்படுத்தி, அவர்களை வைத்து ஒரு பூச்சாண்டி காட்டப்பட்டது - ஹக்கீம்
பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை ஜனாதிபதியினால் பாராளு மன்றத்தில் தெரிவிக்கப்பட்ட அரசாங்கத்தின் கொள்கை பிரகடன உரை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ் வாறு தெரிவித்தார்.
மக்களுக்கு வாக்குறுதியளித்தப்படி சுபீட்சமான நாட்டையே உருவாக்க வேண்டும். ஆனால், 19 ஆவது திருத்தச்சட்டத்தை அகற்ற விரும்புகின் றனர். புதிய அரசியலமைப்பையும் அறிமுகப்படுத்த உள்ளதாகக் கூறுகின்றனர்.
19இல் உள்ள நல்ல விடயங்களையும் அகற்ற விரும்புகின்றனரா? அல்லது அரசாங்கம் அவர்களுக்குத் தவறானது என கருதும் விடயங்களை அகற்ற முற்படுகின்றனரா என தெளிவில்லாதுள்ளது. இதற்கு ஒரு வரைபை முன்வைக்குமானால் அதனைத் தெளிவாக விளங்கிக்கொள்ளக் கூடியதாக இருக்கும்.
ஒரு சமுதாயத்தின் மீது அச்சுறுத்தலை ஏற்படுத்தி அவர்களை வைத்து ஒரு பூச்சாண்டி காட்டப்பட்டது. பயங்கரவாதம் ஒழிக்கப்பட வேண்டும். அதேபோன்று அதற்கு உதவியவர்களைச் சட்டத்தின் முன் கொண்டு வாருங்கள். மாறாக ஒரு சமுதாயத்தின்மீது இன வெறுப்பைத் தூண்டும் பறையை அடிக்கக் கூடாது.
எமது நாடு பல்வகைத்தன்மை கொண்ட நாடு. பல இன, மொழிகள் உள்ளன. இவர்களுக்கென தனியான திருமணச் சட்டங்கள் மற்றும் சொந்த விவகாரங்களைப் பார்த்துக்கொள்ள நாம் வாய்ப்பளித் துள்ளோம்
அவ்வாறான பல்வகைமையினை அகற்ற வேண்டும் என்பது ஆபத் தானது. அது சமச்சீரற்ற தன்மையை ஏற்படுத்தும். அனர்த்தமிகு நிலைக் குக் கொண்டுசெல்லும். அவ்வாறான நிலை ஏற்படக் கூடாதென எதிர்பார்க்கிறோம் என்றார்.
MUDIUMENRAAL,!!!! NAANGAL ILLAAMAL
ReplyDeleteAATCHI AMAITHUKAATTUNGAL. SHINGALAVARKALAI THOONDIVITTA, INDA HAKEEMUDAYA THUVESHA, INVAATHA
SHAVALEY,IVAI ANAITHIRKUM KAARANAM.
NADAIPERUM ATHANAI THEENGUKALUKKUM ,
HAKEEMUM, RISHADUM PORUPPEDUKKAVENDUM.
ஹகீம் சொல்வதில் என்ன தவறு உள்ளது? அவர் உண்மையைத்தான் சொல்கிறார் . உயிர்த்த ஞாயிறு தாக்குதலும் அதன் பின்னரான அனைத்து நடவடிக்கைகளும் ஒரு பூச்சாண்டி நாடகம்தான் . சிங்களவர்களை தூன்டிவிட்டு ஆட்சியை கைப்பற்றியதும் அந்த பூச்சாண்டி காட்டியவர்கள்தான் . இந்த ஆட்சி நீடிக்கவும் மாட்டீது , உண்மையும் வெளிவந்தே தீரும் இன்ஷா அல்லாஹ் .
ReplyDeleteyes true
ReplyDelete