முழுநாடும் கடும் பொருளாதார, ஆபத்தை எதிர்கொள்ளலாம் - ஜனாதிபதியின் செயலாளர்
அத தெரண தொலைக்காட்சியில் நேற்று (24) ஒளிபரப்பான ´360´ நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
வாகன இறக்குமதி பெரிய அந்நிய செலாவணி ஈட்டிதர கூடியது எனினும், ஆனால் தற்போது அரசாங்கம் தேவையற்ற பொருட்களின் இறக்குமதியை தடைசெய்துள்ளதாகவும் கூறினார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்து தெரிவித்த ஜனாதிபதியின் செயலாளர், ´தேவையற்ற பொருட்களை இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பபட்டுள்ளது. குறிப்பாக 2019 வரை வருடத்திற்கு 1,000 மில்லியன் முதல் 1,200 மில்லியன் வரை வாகனங்கள் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. கப்பல்கள் மூலமே இவை கொண்டு வரப்பட்டுள்ளன.
அவ்வாறு 2015 - 2019 வரை நாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு குவிந்துள்ள வாகனங்களின் எண்ணிக்கை அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு போதுமானது. இப்போதும் சென்று பணம் செலுத்தி வாகனத்தை வாங்கலாம். விலை உயர்வு குறித்த பிரச்சினையாகும். விரும்பினால், சென்று சிறந்த காரை வாங்கவும். அந்தளவுக்கு வாகனங்கள் உள்ளன.
இவ்வாறான நிலையில் மற்றொரு அந்நிய செலாவணி நெருக்கடியை எதிர்கொண்டு இறக்குமதி மிக அதிகம் என்று கூறுகின்றோம். எதை நாம் வாங்குவது? வாகனத்தை இறக்குமதி செய்து அதை மறுசீரமைக்கப்பு செய்து ஏற்றுமதி செய்தால் அதில் நியாயம் உண்டு. ஆனால் இது அப்படியானதல்ல.
1.2 பில்லியன் ரூபா செலவிட்டு பின்னர் அதற்கு எரிபொருள், உதிரி பாகங்கள், சேவை கட்டணம் மற்றும் அதற்கு சில ரொயல்டிகளை கொண்டு வர வேண்டும். அது அந்நிய செலாவணி முழுமையாக வெளிச்செல்லும் செயற்பாடு.
உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை அதிகம். எண்ணெயும் உண்டு, வாகனங்களும் இறக்குமதி செய்யப்படுகின்றன. இதனால் முழு நாடும் கடுமையான பொருளாதார ஆபத்தை எதிர்கொள்ளும் அதனை சீர்செய்ய நிலையான கொள்கை ஒன்று அவசியம். ஆகவே, இது தொடர்பில் வெகு விரைவில் தீர்மானிக்க வேண்டியது முக்கியம்´ என்றார்.
Your govt burning our janaza.
ReplyDeleteIt will happend soon.
Beware god.our god he is having full super power man in the world.your govt puppets in front our god.
20 மில்லியன் மக்களுக்கு 1000 மில்லியன் வாகனங்களா ?
ReplyDelete