நாட்டில் சகலரும் ஒன்றாக வாழக் கூடியவாறு, அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும்
அன்று 50 க்கு 50 கேட்டு முன்வைத்த கோரிக்கை நியாயமாக இருந்திருந்தால் இன்று தீர்வு வந்திருக்கும். இனப்பிரச்சினையில் ஒரு வீதம் கூட தீர்வு பெற முடியாமல் போனதற்கு இதுவே காரணம் என தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம். அதாவுல்லா எம்.பி தெரிவித்தார். வெவ்வேறு நாடுகளிலுள்ள தீர்வு பற்றி சிந்தித்தே கோரிக்கை முன்வைக்கப்படுவதாக கூறிய அவர், நாட்டில் சகலரும் ஒன்றாக வாழக் கூடியவாறு அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
இடைக்கால கணக்கறிக்கை மீதான விவாதத்தில் உரையாற்றிய அவர், தேசிய காங்கிரஸ் நேர்த்தியான பாதையில் பயணிக்கிறது.வெளிநாட்டு சக்திகளின் தலையீடின்றி எமது மக்களின் தேவைகளை நிறைவேற்ற முடியும்.எல்லோரும் ஒற்றுமையாக வாழும் வகையிலான யாப்பு உருவாக வேண்டும்.தேசிய காங்கிரஸிற்கு கொள்கை பிடிப்புள்ள மக்கள் வாக்களித்துள்ளனர்.பொதிகளுக்காக எமக்கு வாக்களிக்கவில்லை.யாருக்காக நாம் பாராளுமன்றம் வருகிறோமோ அதனை மறந்தே எம்.பிக்கள் செயற்படுகின்றனர்.’திருடனாக திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது’.எம்.பிக்கள் பொதிகள் கொடுத்து வாக்கு பெறுவதை நிறுத்த வேண்டும்.எமது அரசியல் கலாசாரம் மாற்றப்பட வேண்டும்.வாக்களித்த பின்னர் பணத்திற்கும் பொதிக்காகவும் வாக்களித்ததை வாக்காளர்கள் உணர வேண்டும்.தனது சமூகம் பிராந்தியம் தொடர்பாக கருதி வாக்களிக்கும் நிலைமை மாற வேண்டும்.
ஷம்ஸ் பாஹிம், சுப்ரமணியம் நிசாந்தன்
Post a Comment