Header Ads



அகதி முகாமில் பிறந்து, கால்பந்து வாங்கவே பணமில்லாமல் அலைந்து, இப்போது புயல்வீரன்


சாம்பியன்ஸ் லீக் காலிறுதி போட்டியில் நட்சத்திர அணியான பார்சிலோனாவை மொத்தமாக துவம்சம் செய்து அல்போன்சோ டேவிஸ் மீண்டும் தம்மை நிரூபித்துள்ளார்.

ஜேர்மனியின் பேயர்ன் மியூனிக் அணியின் இளம் புயல் அல்போன்சோ டேவிஸ் பற்றியே மொத்த பத்திரிகை, ஊடகங்களும் விவாதிக்கின்றன.

ஆனால் ஒரு கால்பந்து வாங்கவே பணம் இல்லாத ஒரு காலகட்டம் அல்போன்சோ டேவிசுக்கு இருந்தது.

19 வயதேயான அல்போன்சோ டேவிஸ் தற்போது வரை மூன்று கண்டங்களில் தமது வாழ்க்கையின் சில பகுதிகளை வாழ்ந்து முடித்துள்ளார்.

லைபீரிய அகதிகளுக்காக ஐக்கிய நாடுகள் மன்றம் கானாவில் உருவாக்கிய அகதிகள் முகாமில் 2000 ஆண்டு நவம்பர் 2-ல் அல்போன்சோ டேவிசின் பிறப்பு.

அங்கிருந்து டேவிஸின் 5 ஆம் வயதில் கனடாவுக்கு குடிபெயர்ந்தது அவரது குடும்பம்.

கால்பந்து விளையாட்டு மீது பைத்தியமாக இருந்த அல்போன்சோ டேவிஸுக்கு ஒரு பந்து வாங்கவே பணம் இல்லாமல் இருந்த ஒரு காலகட்டத்தில் இருந்து,

தற்போது 19 வயதேயான அவரது மொத்த மதிப்பு 165 கோடி ரூபாய். இதுவும் எம்.எல்.எஸ் அணியில் இருந்து பேயர்ன் மியூனிக் அணிக்கு மாறியதால் கிடைத்த சாதனை தொகை என்றே கூறப்படுகிறது.

அல்போன்சோ டேவிஸின் கால்பந்து பயணம் முதலில் எட்மண்டன் அணியில் தொடங்கி தற்போது பேயர்ன் மியூனிக்கில் எட்டியுள்ளது.

பேயர்ன் மியூனிக் அணியில் தமது புயல் வேகத்தால் பல சாதனைகள நிகழ்த்தியுள்ள அல்போன்சோ டேவிஸ்,

விளையாட்டு அரங்கில் மணிக்கு 36.51கி.மீ வேகத்தில் புயலானவர் என்ற சாதனையை பதிவு செய்துள்ளார்.

2017 ஜூன் 6 ஆம் திகதி கனேடிய குடிமகனாக மாறிய அல்போன்சோ டேவிசுக்கு அதே நாளில் கனேடிய அணிக்காக விளையாட அழைப்பு வந்துள்ளது.

லைபீரியா மற்றும் கானா நாடுகளின் இழப்பு கனடாவுக்கு பெருமை சேர்த்தது அல்போன்சோ டேவிஸ் வருகை.

No comments

Powered by Blogger.