Header Ads



அதிக விரும்பு வாக்குகளுடன், பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள பேராசியர்கள்


நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் புதிதாக தெரிவான உறுப்பினர்களில் அதிக வாக்குகளை பெற்ற மூவர்கள் முனைவர் பட்டம் பெற்ற பட்டதாரிகள் என தெரிவிக்கப்படுகின்றது.


அதிக வாக்குகளை பெற்றவர்களில் கம்பஹா மாவட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்திய போட்டியிட்ட பேராசிரியர் நாலக கொடஹேவா தெரிவாகியுள்ளார். அவர் 325,479 வாக்குகளை பெற்றுள்ளார்.


இரண்டாவதாக குருணாகல் மாவட்டத்தில் போட்டியிட்ட பேராசிரியர் குணபால ரத்னசேகர தெரிவாகியுள்ளார். அவர் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளராகும். அவர் 141,991 வாக்குகளை பெற்றுள்ளார்.


புதியவர்களில் மூன்றாவதாக அதிக வாக்குகளை பெற்றவர் ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான வைத்தியர் ஜயசுமன என்பவராகும். அவர் 133,980 வாக்குகளை பெற்றுக் கொண்டுள்ளார்.

4 comments:

  1. இந்த சன்ன ஜயசுமான என்பவர் தான் Dr.ஷாபி (குருநாகல்) பற்றி முதன் முதலில் FB யில் பதிவிட்டு எல்லா குழப்பங்களுக்கும் காரணமானவர்

    ReplyDelete
  2. கற்றவரகள் அவையினை அலங்கரித்தால் அவைக்கும் பெருமை. நாட்டிற்கும் பெருமை.

    ReplyDelete
  3. முனைவர் பட்டம் பெற்றவர்கள் எல்லாம் பேராசியர்கள் அல்லர்.
    கலாநிதி நாலக கொடஹேவா எந்தப் பல்கலைக்கழகத்தில் பேராசியராக இருநாதார்?
    சிரேஷ்ட விரிவுரையாளர் என்பதும் பேராசிரியர் என்பதும் இரண்டு பதவிநிலைகள்.


    ReplyDelete
  4. முனைவர் பட்டம் பெற்றவர்கள் எல்லாம் பேராசியர்கள் அல்லர்.
    கலாநிதி நாலக கொடஹேவா எந்தப் பல்கலைக்கழகத்தில் பேராசியராக இருந்தார்?
    சிரேஷ்ட விரிவுரையாளர் என்பதும் பேராசிரியர் என்பதும் இரண்டு வேறு பதவிநிலைகள்.


    ReplyDelete

Powered by Blogger.