Header Ads



பௌத்த மத தலைவர்கள், பிரதமருக்கு வழங்கிய ஆலோசனை


(இராஜதுரை ஹஷான்)

நாட்டு மக்கள் 2015 ஆம் ஆண்டு அரசியல் ரீதியில் செய்த தவறை  இம்முறை  பெரும்பான்மை  ஆதரவை  வழங்கி திருத்திக் கொண்டுள்ளார்கள். மக்கள் பொறுப்பினை   நிறைவேற்றியுள்ளார்கள். ஆகவே இனி ஆட்சியாளர்கள் பொறுப்புக்களை   நிறைவேற்ற  வேண்டும்.    

பாதிப்பினை ஏற்படுத்தும் அரசியலமைப்பினை நீக்கி அனுகூலமான   அரசியலமைப்பினை உருவாக்குதல் அவசியம் என  வட மத்திய  பிரிவுக்கு பொறுப்பான   பிரதான  பௌத்தபீட தலைவர்   பல்லேகம  சிறிநிவாச  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆலோசனை வழங்கினார்.

பிரதமர் மஹிந்த  ராஜபக்ஷ  இன்றைய  தினம்  ஸ்ரீ மஹா போதி,  ருவன்வெளிசாய ஆகிய    சிறப்புமிக்க விகாரைகளுக்கு சென்று  மத வழிபாடுகளில் ஈடுப்பட்டார். பின்னர்  பௌத்தமத பீட  தலைவர்களை சந்தித்து ஆசிப் பெற்றுக் கொண்டார்.

இடம் பெற்று முடிந்த பொதுத்தேர்தல் அரசியல் ரீதியில் எதிர்பார்த்த   மாற்றத்தை  ஏற்படுத்தியுள்ளது.   நாட்டு மக்கள் 2015 ம் ஆண்டு அரசியல் ரீதியில் செய்த தவறை இம்முறை    பெரும்பான்மை ஆதரவை  வழங்கி திருத்திக் கொண்டுள்ளார்கள். இனி  சிறந்த  அரச  நிர்வாகத்தை முன்னெடுப்பது    அவசியமாகும்.

நாட்டு மக்கள்  தமது  கடமையை முறையாக நிறைவேற்றியுள்ளார்கள். இனி ஆட்சியார்கள்    தங்களின் கடமைகளை சரிவர  செயற்படுத்த  வேண்டும். மக்களின்  வெறுப்பக்கு  உள்ளானால் மீண்டும் மாற்றம் ஏற்படும்.  பாதிப்பினை ஏற்படுத்தும்   அரசியலமைப்பினை  நீக்கி     நாட்டுக்கு  அனுகூலமான  அரசியலமைப்பை உருவாக்குவதற்கு   ஆட்சியாளர்கள்  கவனம் செலுத்த வேண்டும் என  குறிப்பிட்டு    தேரர்  பிரதமருக்கு ஆசி  வழங்கினார்.

அநுராதபுர  மாவட்டத்தில் உள்ள தொல்பொருள்  சிறப்பு மிக்க இடங்களை பாதுகாப்பாற்கு அரசாங்கம் உரிய  நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.   அரச பதவி கிடைக்கும்     அனைத்து சந்தர்ப்பங்களிலும் அநுராதபுர  வரலாற்று  சிறப்பு மிக்க இடத்திற்கு  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விஜயம் செய்வது  சிறப்புக்குரியது.   சிறந்த  அரசாங்கத்தை அனைத்து  தரப்பினரையும் ஒன்றுப்படுத்தி முன்னெடுக்க வேண்டும். தேசிய பாதுகாப்பிற்கு அதியுச்ச  முன்னுரிமை  கொடுப்பது     அரச தலைவர்களின் பொறுப்பாகும் என பல்லேகட சிறிநிவாச தேரர்  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்குஆசி  வழங்கினார்.

No comments

Powered by Blogger.