Header Ads



ஞானசாரருக்கா, ரதன தேரருக்கா தேசிப் பட்டியல் என்பதை நானே தீர்மானிப்பேன்


(இராஜதுரை ஹஷான்)

அபேஜன  பலவேகய  கட்சிக்கு   ஒதுக்கப்பட்டுள்ள ஒரு  தேசிய பட்டியல் ஆசனத்தை  யாருக்கு  வழங்க வேண்டும் என்று தீர்மானிக்கும் அதிகாரம்  எனக்கு மாத்திரம் உண்டு. அத்துரலிய தேரரரை தற்காலிகமாக  பாராளுமன்றத்துக்கு அனுப்புவதற்கு பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் இணக்கம் தெரிவிக்க வேண்டும். 

பௌத்த மத உரிமைகளை பாதுகாக்க ஞானசாரதேரர் பாராளுமன்றம் செல்ல வேண்டும் என அபேஜனபல வேகய கட்சியின் பொதுச் செயலாளர்  வேதினிகம  விமலதிஸ்ஸ  தேரர்  தெரிவித்தார்.

 அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

இடம் பெற்று முடிந்த பொதுத்தேர்தலில்   அபேஜன  பல வேகய  கட்சி  67 ஆயிரம்  வாக்குகளை  பெற்றுள்ளது.  பெற்றுக் கொண்டுள்ள  மக்களாணை முறையாக  பயன்படுத்தப்பட வேண்டும்.   தேசிய பட்டியல் விவகாரத்தில்    கட்சிக்குள் முரண்பாடுகள்   தோற்றம் பெற்ற காரணத்தினால் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு எனது பெயரை   சுயமாக  பரிந்துரை செய்தேன்.

தேசிய  பட்டியல் ஊடாக கிடைக்கப்  பெற்றுள்ள ஒரு  ஆசனத்தில்   ஞானசார தேரர் அல்லது அத்துரலியே ரத்ன தேரர் பாராளுமன்றம் செல்ல வேண்டும். அதனை விடுத்து அபேஜனபல  வேகய கட்சியின்  பிறிதொருவர்     பாராளுமன்றம் செல்வதற்கு  இடமளிக்க முடியாது.   தேசிய ஆசனம் தொடர்பில் தீர்மானம் எடுக்கும் அதிகாரம் கட்சியின்  பொதுச்செயலாளர் என்ற ரீதியில்    எனக்கு மாத்திரமே  உண்டு. கட்சியின் கொள்கைக்கு அமைய    மத்திய செயற்குழுவால்   நிரூபிக்கப்படாத காரணங்களின்றி   பொதுச்செயலாளரை நீக்கும் அதிகாரம்        கட்சி தலைவருக்கு   கிடையாது.

பொதுபல சேனா அமைப்பின்  பொதுச்செயலாளர் ஞானசார தேரர்    தேசிய பட்டியல் ஊடாக    பாராளுமன்றம்    செல்வதற்கு முடியாது , ஏனெனில் அவரது பெயர் தேசிய  பட்டியaல் உள்ளடங்கவில்லை.  ஆகவே  அத்துரலியே  ரத்ன தேரர்   தேசிய பட்டியலில் பாராளுமன்றம் சென்று அவர் சுயமாகவே  பாராளுமன்ற உறுப்புரிமையினை நீக்க வேண்டும்.  அதன் பின்னர்  அவ்விடத்திற்கு   ஞானசார தேரரை   இலகுவில் நியமிக்க முடியும்.   இவ்விடயத்தையே  நான்  ஆரம்பத்தில் தெரிவித்தேன். ஆனால் இரு தரப்பினரும்  இதற்கு இணக்கம்  தெரிவிக்கவில்லை.

தேசிய பட்டியல் ஆசனத்தை அத்துரலியே  ரத்ன தேரருக்கு  வழங்குவதற்கு  ஞானசார தேரரும்,        பிறகு பதவி விலகுவதற்கு   அத்துரலிய ரத்ன தேரரும்        முழுமையாக இணக்கம் தெரிவிக்க வேண்டும்.    ஞானசார தேரர் பாராளுமன்றம்   செல்வதற்கு இந்த வழிமுறையை  விட பிறிதொரு வழி கிடையாது.   ஞானசார தேரர்   கட்டாயம் பாராளுமன்றம் செல்ல வேண்டும். ஆகவே யாருக்கு   தேசிய பட்டியல் வழங்க வேண்டும் என்பதை   நானே  தீர்மானிப்பேன்   என்றார்.

1 comment:

  1. 'ஏதாவது ஒரு நன்மை உங்களுக்கு ஏற்பட்டால், அது அவர்களுக்கு வருத்தத்தை கொடுக்கிறது;

    உங்களுக்கு ஏதாவது தீமை ஏற்பட்டால், அதற்காக அவர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள்.

    நீங்கள் பொறுமையுடனும், பயபக்தியுடனுமிருந்தால் அவர்களுடைய சூழ்ச்சி உங்களுக்கு எந்தத் தீமையும் செய்யாது.

    நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்வதை (எல்லாம்) சூழ்ந்து அறிகிறவன்.'

    (அல்குர்ஆன் : 3:120)
    www.tamililquran.com

    ReplyDelete

Powered by Blogger.