Header Ads



மக்கள் மீது இரக்கம் கொண்ட அரசாங்கத்தை உருவாக்குவேன், எனது வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன் - சஜித்

(செ.தேன்மொழி)

நாட்டு மக்களின் இன்ப, துன்பங்கள் தொடர்பில் அக்கறை கொண்ட இரக்கமிக்க அரசாங்கத்தை உருவாக்குவதாக தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச, மறைந்த முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரமதாசவின் புதவல்வனான தான் வாழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதாகவும், தன்மீது நம்பிக்கை கொள்ளுமாறும் வேண்டுகோள் விடுத்தார்.

கொழும்பு -15 இல் அமைந்துள்ள தொடர்மாடி குடியிருப்பு தொகுதியில்  இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் இவ்வாறு தெரிலித்த அவர் மேலும் கூறியதாவது,

தற்போது நாடு பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர் நோக்கி வருகின்றது. பாதிகப்பட்டுள்ள மக்களுக்கு அரசாங்கத்தினால் எந்த நிவாரணமும் பெற்றுக் கொடுக்க முடியவில்லை. இந்நிலையில் ஐக்கிய மக்கள் சக்தியின ஆட்சியில் நாளாந்தம் ஊதியம் பெருபவர்கள் , நிரந்தர வருமானம் இன்றி இருப்பவர்கள், வாழ்வாதார பிரச்சினையை எதிர்நோக்கி வரும் சாதாரண மக்கள்  என அனைவரும் தங்களது பொருளாதாரத்தை சீர் செய்துக் கொள்வதற்காக மாதத்திற்கு 20 ஆயிரம் ரூபாய் பணத்தை பெற்றுக் கொடுப்போம்.

இதேவேளை கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு இமுல் படுத்தப்பட்டிருந்த காலக்கட்டத்தில் அதிகமான மின்பாவனையினால் , அதிகரிக்கப்பட்ட மார்ச் மற்றும் ஏப்பரல் மாதத்திற்கான மின் கட்டணங்களை செலுத்திவர்களின் , கட்டணத்தொகையை எமது ஆட்சியில் மீளப் பெற்றுக் கொடுப்போம். அதுமட்டுமன்றி நாங்கள் ஈட்சியை கைப்பற்றி 24 மணித்தியாலயத்திற்குள் எரிபொருளின் விலையை குறைக்க நடவடிக்கை எடுப்போம்.

தொடர்மாடி குடியிருப்புகளில் வாழ்ந்துவரும் மக்களின் வீட்டு உரிமைபத்திரம் தொடர்பிலும் அவதானம் செலுத்தி நடவடிக்கை எடுப்பதுடன் , அனைவருக்கும் உரிமைப்பத்திரங்களை பெற்றுக் கொடுப்போம். சஜித் பிரேமதாசவின் வாக்குறுதிகள் மீது சந்தேகம் கொள்ளாதீர்கள். நான் கட்டாயம் எனது வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன். நான் மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஆர்.பிரேமதாசவின் மகன் என்றவகையில் உங்களுக்கு உறுதியளக்கின்றேன் , இதுவரையிலும் இல்லாத சாதாரண மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் அறிந்த , அவர்கள் மீது இரக்கத்துடன் செயற்படக்கூடிய அரசாங்கத்தை நான் உருவாக்குவேன்.

No comments

Powered by Blogger.