Header Ads



இந்த யதார்தத்தை புரிந்து செயற்படாவிட்டால், முஸ்லிம் சமூகம் ஒதுக்கப்படும்


அண்மையில் கிண்ணியா சென்றிருந்தேன். அதுதான் முதல் தடவையாக நான் கிண்ணியா சென்றது.

கானுமிடமெல்லாம் முஸ்லிம்கள்  பஸ்களில் முழுமையாக முஸ்லிம்கள் மட்டும் பயணிக்கிறார்கள்.

எனக்கு பார்க்கப் அதிசயமாக இருந்தது. ஆனால் நாம் வாழும் சூழல் அப்படியானதல்ல.

எமது அலுவலகங்களில் முஸ்லிம் நண்பர்கள் இல்லை பஸ்களில் வங்கிகளில் முஸ்லிம்களை காண்பது அரிது.

திருகோணமலையில், மட்டகளப்பில்,

கல்முனையில் செய்யும் அரசியலை எம்மால் கண்டியில் செய்ய முடியாது.

இந்த யதார்தத்தை புரிந்து நாமும், நம் அரசியல் வாதிகளும் செயற்படாவிட்டால் அரசியல் ரீதியாக இன்னும் இன்னும் ஒதுக்கப்பட்ட ஒரு சமூகமாக இலங்கை முஸ்லிம் சமூகம் மாறும் என்பதில் சந்தேகமில்லை.

"முஸ்லிம் பிரதிநிதித்துவம்"

"பலமான எதிர்க்கட்சி"

"மூன்றில் இரண்டு பெரும்பான்மை"

"ஜனாசா எரிப்பு"

இப்படியான சுலோகங்களைப் பாவித்துதான் மக்களை அரசிடம் இருந்து தூரமாக்கினார்கள் நம் அரசியல்வாதிகள்.

மக்களும் நமது பிரதிநிதித்துவம் அதிகாரித்தால் இந்த அரசாங்கத்தினால் தமக்கு எதிராக ஒன்றும் செய்ய முடியாமல் போகும் என்று நம்பினார்கள்.

ஆனால் அது இனி பெரிய அளவு வேலைக்கு ஆகாது என்பதை மக்கள் இப்போது உணரத் தொடங்கி இருக்கிறார்கள்.

எமது அரசியல் வாதிகள் ஒவ்வொரு தேர்தலிலும் முஸ்லிம் மக்களின் உணர்வுகளைத் தூண்டி வாக்குகளைப் பெற்றுக் கொள்கிறார்கள்.

அந்த வாக்குகளைப் பயன்படுத்தி, நமது மக்கள் யாருக்கு எதிராக வாக்களித்தார்களோ அவர்களுடன் போய்ச் சேர்ந்து கொள்வார்கள்.

இந்த கபடத் தனமான அரசியலை நம் தலைவர்கள் செய்யத் தொடங்கிய நாளில் இருந்துதான், முஸ்லிம் மக்கள், முஸ்லிம் அரசியல்வாதிகள்,  இரு தரப்பின் மீதும் இலங்கை பெரும்பான்மை சமூகத்துக்கு நம்பிக்கை இல்லாமல் போனது.

இந்த அரசாங்கத்துக்கு பெரும்பான்மையைப்  பெற்றுக் கொள்ள சில ஆசனங்கள் குறைவாக இருந்து.

முஸ்லிம் கட்சிகளிடம் உதவி கேட்டிருந்தால், இரண்டு தேசியப் பட்டியல், இரண்டு கெபினட்  நான்கு ராஜாங்கம் என்று டீலை அடித்து  இருப்பார்கள்.

இப்படி டீல் அடித்து பேரம் பேசி அரசியல் செய்துதான் இன்று நம் சமூகத்தை  நடுத்தெருவில் விட்டு இருக்கிறார்கள்.

இனியேனும் முஸ்லிம் சமூகம் இவர்களது பிரதிநிதித்துவத்தை பாதுகாக்க வாக்களிக்காமல்  சமூகத்தின், தேசத்தின் நலனைக் கருத்திற்கொண்டு நடுநிலையாக நடுந்து  கொள்ள வேண்டும்.

Safwan Basheer


2 comments:

  1. I agree with you.very correctly said about our politicians.

    ReplyDelete
  2. Who is this person who has made these observations? His name does NOT appear anywhere in the article. What is his name?

    ReplyDelete

Powered by Blogger.