Header Ads



இலங்கையின் தேர்தல் - ரொய்ட்டர் வெளியிட்டுள்ள எதிர்வுகூறல்


புதன்கிழமை இடம்பெறவுள்ள தேர்தல் மூலம், இலங்கையின் பிளவுபட்ட அரசியலில் தனது பிடியை இறுக்கிக்கொள்வது ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச நம்பிக்கை கொண்டுள்ளார், இந்த தேர்தல் அவரது சகோதரரை மேலும் உயர்த்துவதுடன் -அவர்கள் தேர்தலில் வெற்றிபெற்றால் அவர்களால் அரசமைப்பில் மாற்றங்களை செய்ய முடியும்.

இலங்கையில் புதிய கொரோனா வைரசினை கட்டுப்படுத்தப்பட்டமைக்கு தானே காரணம் என உரிமை கொண்டாடும் ராஜபக்ச , தேர்தலில் உத்தியோகபூர் வெற்றியை பெறுவதன் மூலம் தனது மூத்த சகோதரரும் முன்னாள் ஜனாதிபதியுமான தற்போதைய பிரதமர் மகிந்த ராஜபக்சவை உத்தியோகபூர்வமாக பிரதமர் பதவியில் அமர்த்த எண்ணியுள்ளார்.

இந்து சமுத்திரத்தின் 21 மில்லியன் சனத்தொகையை கொண்ட சிறிய தீவின் வாக்காளர்கள் – இரண்டு தடவை பிற்போடப்பட்ட தேர்தலில் -முகக்கவசத்தை அணியப்போகின்றனர், அவர்கள் தங்கள் தெரிவுகளை குறிப்பிடுவதற்காக தங்கள் பேனாக்களை கொண்டு செல்லப்போகின்றனர், வாக்களிப்பு நிலையங்களில் சமூகவிலக்கலை பேணப்போகின்றனர்.

வியாழக்கிழமை வாக்குகள் எண்ணப்படும்.

ஞாயிற்றுக்கிழமை வரை இலங்கையில் 2816 பேர் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளனர்,11 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

இந்த புள்ளிவிபரங்கள் ஏனைய தென்னாசிய நாடுகளுடன் ஒப்பிடும்போது குறைவானவை.

நீங்கள் பாதுகாப்பாக வாக்களிக்கும் நிலையை உருவாக்குவோம் என தெரிவித்துள்ள மகிந்த தேசப்பிரிய அச்சமின்றி மக்களை வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

தங்களின் அரசியல்வாழ்க்கையை சிங்கள பௌத்ததேசியவாதிகளாக உருவாக்கிய ராஜபக்ச சகோதரர்கள் .இனச்சிறுபான்மைமயினருக்கான தனித்தாயகத்திற்காக போரடிய தமிழ்பிரிவினைவாதிகளை ஒழித்தமைக்காக நன்கு அறியப்பட்டவர்கள் .
மூத்த ராஜபக்ச ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் உள்நாட்டு யுத்தம் முடிவிற்குவந்தது.

சிங்கள பெரும்பான்மையினர் மத்தியில் சகோதரர்களுக்கு உள்ள ஆதரவை கருத்தில்கொள்ளும்போது சஜித்பிரேமதாசவை தோற்கடித்து மகிந்த ராஜபக்சவே பிரதமராவார் என ஆய்வாளாகள் தெரிவிக்கின்றனர்.

இலங்கையில் தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து கணிப்பினை மேற்கொள்ளும் பாரம்பரியமில்லை.
எதிர்கட்சி வேட்பாளர் 1993 இல் தமிழ் தற்கொலை குண்டுதாரியினால் கொல்லப்பட்ட ஜனாதிபதியின் மகனாவார்.

அதிகார துஸ்பிரயோகத்தினை தடுப்பதற்காக அகற்றப்பட்ட ஜனாதிபதிக்கான அதிகாரங்களை. மீண்டும் பெற்றுக்கொள்வதற்கு ராஜபக்சக்கள் விரும்புகின்றனர்.

கோத்தபாய ராஜபக்சவை ஜனாதிபதியாக தெரிவு செய்ததன் மூலம் ராஜபக்சக்கள் மீண்டும் வேண்டும் என தாங்கள் விரும்புவதை பெரும்பான்மை சமூகம் வெளிப்படுத்தியுள்ளது என தெரிவிக்கின்றார் சுயாதீன அரசியல் ஆய்வாளர் ஜயதேவ உயாங்கொட.

பாரியமாற்றங்களை மேற்கொள்வதற்கான பெரும்பான்மை அவர்களுக்கு கிடைக்குமா என்பதே கேள்வியாகவுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

1 comment:

Powered by Blogger.