தோல்வியடைந்தார் ரவி
2020 பாராளுமன்றத் தேர்தலைத் தொடர்ந்து முன்னாள் நிதியமைச்சரும், ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளருமான ரவி கருணாநாயக்க பாராளுமன்றத்தில் தமக்கான இடத்தினை பெறத் தவறிவிட்டார்.
ரவி கருணநாயக்க முதன்முதலில் 1994 இல் ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணியின் தேசிய பட்டியலூடாக பாராளுமன்றத்துக்கு நுழைந்தார்.
1999 இல் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் ஐக்கிய தேசியக் கட்சியில் சேர்ந்தார்.
ரவி கருணநாயக்க நிதி, வெளியுறவு, வர்த்தகம் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் மற்றும் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சராக பணியாற்றியுள்ளார்.
மார்ச் 2016 இல் தெரிவிக்கப்பட்ட மத்திய வங்கி பிணைமுறி மோசடியில் குற்றம் சாட்டப்பட்ட முக்கிய அரசியல்வாதிகளில் இவரும் ஒருவர்.
Post a Comment