உலககிண்ண விவாதபோட்டி - போராடி தோற்றது இலங்கை
அரையிறுதிப் போட்டியில் அயர்லாந்து அணியை 7-0 என்ற அடிப்படையில் வெற்றி கொண்டு, இலங்கை அணி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றிருந்தது.
பாடசாலை விவாத உலக கிண்ணத்துக்கான இந்தப் போட்டியில் ஒவ்வொரு நாட்டில் இருந்தும் ஒரு அணி மாத்திரம் பங்கேற்க முடியும். இந்த ஆண்டு 68 நாடுகள் பங்கேற்றிருந்த நிலையில், இலங்கை அணி இறுதிப் போட்டியில் இன்று கனடாவுடன் மோதியது.
இந்தப் போட்டியில் இலங்கை அணியின் சார்பில் இரண்டு தமிழ் மாணவர்கள் உள்ளிட்ட 6 மாணவர்கள் பங்கேற்றுள்ளனர்.
கொழும்பு றோயல் கல்லூரி மாணவர்களான சாலெம் சுமந்திரன், ஜானுவல் டி சில்வா ஆகியோரும், கொழும்பு சர்வதேச பாடசாலையில் இருந்து ஜஸ்மின் மார்க்கண்டு மற்றும் ராகுல் டி சில்வா ஆகியோரும், ஆனந்தா கல்லூரியில் இருந்து சனிந்து ரத்னாயக்க, என்ற மாணவனும், கொழும்பு மகளிர் கல்லூரியில் இருந்து ரேய்கா விமலசேகர என்ற மாணவியும் இந்தப் போட்டியில் பங்கேற்றனர்.
ஆங்கிலம் இரண்டாம் மொழியாக (ஈ.எஸ்.எல்) இருந்த ஒரு நாட்டிற்கான சிறந்த அணியாக இலங்கை தேர்வு செய்யப்பட்டது.
போட்டியில் சிறந்த ஈ.எஸ்.எல் பேச்சாளர்களில் ஒருவராக இருந்ததற்காக ஷாலெம் சுமந்திரன் ஒரு விருதை வென்றார்.
இந்த போட்டி மெக்ஸிக்கோவில் நடத்தப்பட்டிருந்தது, ஆனால் கொரோனா வைரஸ் காரணமாக ஒன்லைனில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
Post a Comment