Header Ads



இலங்கையில் கையடக்க தொலைபேசி, பாவிப்பவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி


இலங்கை மக்கள் பயன்படுத்தும் தொலைபேசி இலக்கங்களை மாற்றாது வேறு தொலைபேசி இணைப்பு சேவையை பெற்றுக்கொள்ளக் கூடிய வசதி ஒன்று ஏற்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டு மக்களுக்கு நன்மை பயக்கும் நோக்கில் இந்த வாய்ப்பினை வழங்க தொலைத் தொடர்பு ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

அதற்கமைய பாவனையாளர்களுக்கு விரும்பிய போன்று வேறு தொலைபேசி சேவையின் சிம் அட்டைகளை பெற்றுக்கொள்ள கூடிய வகையில் சேவைகளை செயற்படுத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான தகவல்களை ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

அதற்கமைய இலங்கையில் தற்போது பாவனையிலுள்ள 071 , 077 , 072 , 078 மற்றும் 075 என்ற இலக்கங்களை பொது இலக்கங்களாக அறிவிக்கப்படவுள்ளது.

பாவனையாளர்களுக்கு தங்கள் இலக்கங்களை மாற்றாமல் வேறு சேவை நிறுவனத்திற்கு மாறக் கூடிய வகையில் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2 comments:

  1. தனிப்பட்ட பாவனையாளர்களின் சொந்தத்தகவல்களை இலகுவாக அரசாங்கத்தால் பெற்றுக் கொள்ளும் ஒரு சூழ்ச்சியாகவே இது தென்படுகின்றது. முன்பு தகவல்களைத் திரட்டும்போது தனித்தனியாக ஒவ் வொரு கம்பனிக்கும் எழுதவும் உத்தரவிடமும் வேண்டும். தற்போது அத்தனை தகவல்களையும் ஒரே கட்டளையில் இலகுவில் பெற்றுக் கொள்ளலாம்.

    ReplyDelete
  2. இந்த டயலொக் காரன் சரியான கவரேஜ் தராம நம்மல பெக்கேஜ் எக்டிவ் பண்ண வச்சு ஏமாத்துறான்.. டேடாவும் அப்படிதான்...
    டேட்டா வேகத்த குறைச்சு நம்மல இன்ஸல்ட் பண்றான்...இனி நல்ல முடிவு கிடைக்கும்

    ReplyDelete

Powered by Blogger.