நீதியமைச்சராக அலி சப்ரி, நியமிக்கப்பட்டதை எதிர்ப்பவர்கள் யார்..?
ஆங்கில ஊடகமொன்றுக்கு வழங்கிய பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்
கேள்வி- நீங்கள் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளமை குறித்தும் அதற்கு பல பௌத்த அமைப்புகள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளமை குறித்தும் என்ன கருதுகின்றீர்கள்?
பதில்-சிறியளவு எண்ணிக்கையிலான தீவிரவாதிகளே எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர், பௌத்த அமைப்புகள் எச்சரிக்கை விடுக்கவில்லை.
இவர்கள் மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள்.
நான் அனைத்து சமூகத்திலும் தீவிரவாதபோக்குடையவர்கள் உள்ளனர் என்பதை எப்போதும் தெரிவித்துள்ளேன்.
இந்த நாட்டில் அனைவரும் சமமாக நடத்தப்படவேண்டும்,இணைந்து செயற்படவேண்டும்.
தீவிரவாத கருத்துக்களையே மதிக்கவேண்டும் ஏனையவர்களுக்கு கருத்துக்களே இருக்ககூடாது என சிலர் கருதுகின்றனர்.
ஆகவே இந்த சூழமைவின் அடிப்படையில் சிலர் எனது நியமனத்தை எதிர்க்கின்றனர் ஏனையவர்கள் அரசியல் நோக்கங்களுக்காக எதிர்க்கின்றனர்.
13வது திருத்தம் நீக்கப்படுமா?
பதில்- இல்லை இந்த தருணத்தில் 20வது திருத்தம் மூலம் 19வது திருத்தத்தினை மறுஆய்விக்கு உட்படுத்துவது குறித்தே கவனம் செலுத்தப்படுகின்றது. உடனடி நடவடிக்கைள் இதற்குள்ளேயே அடங்குகின்றன.
ஜனாதிபதியின் பதவிகால எல்லை நீடிப்பு 19வது திருத்தத்தில் மாற்றங்கள் தவிர 20வது திருத்தத்தின் மூலம் வேறு எதனை எதிர்பார்க்க முடியும்?
பதில்-இதற்காக உபகுழுவொனறு நியமிக்கப்பட்டுள்ளது,அவர்கள் இது குறித்து ஆராய்கின்றனர்.ஆகவே இது குறித்து தற்போதைக்கு கருத்து தெரிவிக்க முடியாது.
இது குறித்து அமைச்சரவை பேச்சாளர் பொதுமக்களுக்கு காலத்துக்கு காலம் தகவல்களை வெளியிடுவார்.
பௌத்த அமைப்புக்கள் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கின்றன என கேட்ட கேள்விக்கு பௌத்த அமைப்புகள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்பது பதில் . கேள்வி பிழையா பதில் பிழையா?
ReplyDeleteboth are correct
ReplyDelete