Header Ads



இழிவான செயல் செய்த மைத்திரிபால, மகிந்த வலுவான தலைவர் - சந்திரிக்கா



சிறிலங்கா சுதந்திரக் கட்சியினை மகிந்த ராஜபக்சவும், மைத்திரிபால சிறிசேனவும் அழித்து விட்டனர் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க தெரிவித்து உள்ளார்.

ஊடகங்களுக்கு இன்று வெள்ளிக்கிழமை -14- வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்து உள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்து உள்ளதாவது:

“நடைபெற்ற பொதுத் தேர்தலில் கிடைத்த வாக்குகளின் எண்ணிக்கை முன்னைய ஜனாதிபதித் தேர்தலில் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கையை விட குறைவாக இருந்தாலும் 2/3 பெரும்பான்மையை பெறுவதற்கான முக்கிய காரணம் ஜே.ஆரின் அரசியல் அமைப்பு ஆகும். இன்னொரு காரணம் பலவீமான கட்சிகளின் எதிர்ப்பு.

இரண்டு முக்கிய கட்சிகள் தற்போது அழிக்கப்பட்டு உள்ளன. ஐக்கிய தேசியக் கட்சி துண்டு துண்டாக உள்ளது. இந்த நாட்டின் இரு பிரதான கட்சிகளும் உடைந்து போய் உள்ளன.

எதிர்கட்சியில் வலுவான தலைவர்கள் இல்லை. இத்தகைய சூழ்நிலையில் எதிர்க்கட்சிக்கு குறைந்த வாக்குகள் கிடைத்தது தொடர்பில் எனக்கு ஆச்சரியம் ஏற்படவில்லை. 

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தற்போதைய தலைவிதி தொடர்பில் நான் கவலைப்படுகின்றேன். இது எனது தாயாரால் உருவாக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டது. மகிந்தவினால் கட்சியின் அழிவு நுட்பமாக மேற்கொள்ளப்பட்டது. சிறிசேன அதனை மிகவும் இழிவான முறையில் செய்தார். எங்கள் கட்சியை விட முற்றிலும் மாறுபட்ட கொள்கைகளைக் கொண்ட பொதுஜன பெரமுனவுடன் நாங்கள் தொடர்பு கொள்ள விரும்பவில்லை என்றார் அவர்.

2


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு புதிய தலைமைத்துவம் தேவை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் இதனை கூறியுள்ளார்.

“ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எங்கே என்று நான் எல்லா இடங்களிலும் தேடிப்பார்கின்றேன். மைத்திரிபால சிறிசேன கடந்த ஆண்டு கட்சியை அழித்துவிட்டார்.

நான் ராஜபக்சவின் அரசியலை ஏற்கவில்லை. ஆனாலும் அவர் ஒரு வலுவான தலைவர். இந்நிலையில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை நினைத்து நான் வருந்துகின்றேன்.

அழுவதா, சிரிப்பதா என்று எனக்குத் தெரியவில்லை, மைத்திரிபால சிறிசேன கட்சியை மோசமான முறையில் அழித்துவிட்டார். தற்போது கேவலமான முறையில் அமைச்சு பதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

சுதந்திரக் கட்சியின் தலைவருக்கு அமைச்சு பதவி வழங்கப்படவில்லை. செயலாளருக்கு பதிக் அமைச்சு வழங்கப்பட்டுள்ளது. அதன் கீழ் எந்த திணைக்களங்களும் இல்லை.

இந்நிலையில், ஒரு புதிய தலைமையின் கீழ், நாங்கள் எங்கள் கட்சி உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்து கட்சியை முன்னோக்கி அழைத்துச் செல்வோம்.

அவ்வாறு செய்யும் எவரும் எனது ஆதரவைப் பெற்றுக்கொள்வார்கள்” என அவர் மேலும் கூறியுள்ளார்.

1 comment:

  1. ஒரு ஜனநாயக நாட்டின் அதன் விழுமியங்கள் சிறந்த முறையில் பேணப்பட வேண்டுமாக இருந்தால் அதி சிறந்த எதிர்க்கட்சி தவிர்க்க முடியாதது. 2/3 பெரும்பான்மை பெறுவதனைக் காட்டிலும் மிகவும் சிறந்தது சகலரின் ஒத்துழைப்புடனும் ஆலோசனையுடனும் ஆட்சியை சிறப்பாக வழிநடாத்திச் செல்வதேயாகும். நல்லாட்சி என்று கூறப்பட்ட ரணில் - மைத்திரி போன்றேபரின் கூட்டு ஆட்சியின் அரசியல் பித்தலாட்டங்கள் காரணமாகவே SLPP ஆட்சிக்கு வந்தது. இந்நிலைமை எதிர்காலத்திலும் ஏற்படாமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டியது நாட்டின் ஜனநாயகவாதிகளின் பெரும் கடமையாகும்.

    ReplyDelete

Powered by Blogger.